AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி படம்

Dorothy Movie Screening At Toronto International Film Festival | இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் டோரதி. இந்தப் படம் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி படம்
டோரதி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Sep 2026 12:36 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னதாக 9 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இறுதியாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் டோரதி. இந்தப் படம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள 10-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில் இந்த டோரதி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி படம்:

இந்த நிலையில் டோரதி படம் வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கன்னடாவில் நடைப்பெற்ற டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் டோரதி படம் திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டியுள்ளனர். மேலும் அந்த விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Jason Sanjay: என் அம்மாவிடம் அதை முதலில் சொன்னேன் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Bigg Boss: ஆளும் அணி Vs எதிர் அணி.. கேப்டனை சாடிய போட்டியாளர்கள்.. கண்ணீரில் சாத்விகா!

Follow Us