AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? ஈரான் அரசு வெளியிட்ட வீடியோ!

Iran Nuclear Attack Advisory : மேற்கு ஆசியாவில் அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?  ஈரான் அரசு வெளியிட்ட வீடியோ!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Nov 2026 22:19 PM IST

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அணு ஆயுத தாக்குதல் (Nuclear Attack) ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அணு வெடிப்பு ஏற்பட்டால் குடிமக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த எட்டு நிமிட அறிவுறுத்தல் காணொளியையும், அவசரகால வழிகாட்டுதல்களையும் ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

ஈரானின் மிக முக்கியமான நதான்ஸ் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள இஸ்பஹான் பகுதியின் அவசரகால சேவைகள் துறையினரால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையமான ஃபோர்டோ- இது பெரும்பாலும் பிகாக்ஸ் மவுண்டன் என்று அழைக்கப்படுகிறது. அதன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சர்வதேச ஊகங்களுக்கு மத்தியில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு வருடாந்திர செயலற்ற பாதுகாப்பு வாரம் நிகழ்வின் ஒரு பகுதி என்றும், நெருக்கடியான சூழல்களுக்கு குடிமக்களைத் தயார்படுத்தவே இந்த விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : இனி தங்கம் மீது நடக்கலாம்.. துபாயில் 24 கேரட் தங்கத்தால் உருவாகும் உலகின் முதல் தங்க நடைபாதை! திறப்பு விழா எப்போது?

ஈரான் வெளியிட்ட வீடியோ

இதையும் படிக்க : பிரான்ஸில் வெடித்த மிகப்பெரிய வன்முறை.. “Calm and Order” உத்தரவிட்ட அதிபர் மேக்ரோன்!

அணு வெடிப்பு ஏற்பட்டால் செய்ய செய்யக்கூடாதவை

  • அணு ஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால், கடுமையான ஒளி, வெடிப்பினால் ஏற்படும் சக்திவாய்ந்த அதிர்வலைகள், அதீத வெப்பம் மற்றும் ஆபத்தான அளவிலான கதிரியக்கம் ஆகியவை முதன்மையான சவால்களாக இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
  • உறுதியான கட்டிடங்களில் குறிப்பாக ஜன்னல்கள் இல்லாத உட்புற அறைகளிலோ தஞ்சம் புகுங்கள். வெளிப்புறக் காற்றை உள்ளே இழுக்கும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை உடனடியாக அணைத்துவிடுங்கள்.
  • கதிரியக்கத் துகள்கள் காற்றின் மூலம் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்பதால், குறைந்தது 24 மணிநேரத்திற்கு நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குள்ளேயே இருப்பது மிக முக்கியம்.
  • கதிரியக்க வீழ்ச்சியிலிருந்து கார்கள் மற்றும் பிற வாகனங்கள் எந்தப் பாதுகாப்பையும் அளிக்காது என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்
  • முன்பே பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் நீரை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Follow Us