AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..

Riyadh Airport Attack: சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களால் ரியாத், தம்மாம், மதீனா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி தாக்குதல்.. இந்தியர் ஒருவர் உயிரிழப்பு.. 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Oct 2026 21:47 PM IST

அக்டோபர் 14, 2026: சவுதி அரேபியாவின் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது அக்டோபர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட ஹவுதி தாக்குதலில் காயமடைந்த இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 11 பேரில் மூவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், எட்டு பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரியாத் விமான நிலைய தாக்குதல் – வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்:


இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், உயிரிழந்த இந்தியரின் இறுதிச்சடங்கு அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி ரியாத்திலேயே நடைபெற்றதாகத் தெரிவித்தார். இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களைத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து வருவதாகவும், அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சவுதியில் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

சவுதி அரேபியாவில் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் உள்ள அராம்கோ தலைமையகத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: சவூதி அரேபியாவில் விமான நிலையம் மீது தாக்குதல்.. 12 பேர் உயிரிழப்பு

இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய இந்தியா, சவுதி அரேபிய மக்களுக்கும் அரசுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை – தூதரகம் தீவிர கண்காணிப்பு

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியத் தூதரகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களால் ரியாத், தம்மாம், மதீனா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: சவுதியில் இலங்கைத் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – வெளியான தகவல்

இதனால் பயணிகள் மற்றும் விமான நிலையங்களில் சிக்கியுள்ளவர்களுக்கு விமான அட்டவணை குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow Us