AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவுக்கு எதிராக எங்கள் கடல் பரப்பை பயன்படுத்த அனுமதியில்லை: இலங்கை அதிபர் உறுதி

India Sri Lanka Relations : இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் நிலப்பரப்பையோ, வான்பரப்பையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். போரில் தங்கள் பக்கம் நிற்குமாறு அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளும் விடுத்த கோரிக்கைகளையும் இலங்கை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக எங்கள் கடல் பரப்பை பயன்படுத்த அனுமதியில்லை: இலங்கை அதிபர் உறுதி
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Oct 2026 17:42 PM IST

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கையின் நிலப்பரப்பையோ, வான்பரப்பையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். மேலும் எங்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விரோதச் செயலுக்கும் எங்கள் கடல் பரப்பையோ நில பரப்பையோ ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ெதரிவித்தார்.

‘இந்தியாவுக்கு எதிராக எங்கள் கடல் பரப்பை பயன்படுத்த அனுமதியில்லை’

மேற்கு ஆசியாவை உலுக்கி வரும் அமெரிக்கா – ஈரான் மோதல் நீடித்து வரும் சூழலில், இலங்கை அணிசேரா வெளியுறவுக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றும் என்றும் அந்நாட்டு அதிபர் திசாநாயக்க மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் தனது அரசு வெளியுறவுத் துறையில் எட்டிய சாதனைகளையும் அவர் நினைவுகூர்ந்தார். இது தொடர்பாக பேசிய அவர், நாங்கள் ராணுவ வலிமை கொண்ட நாடு அல்ல. எனவே எந்தவொரு ராணுவ மோதலிலும் நாங்கள் ஒரு நிலைப்பாடு எஎடுக்கமாட்டோம்.

இதையும் படிக்க : போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

மேலும், போரில் தங்கள் பக்கம் நிற்குமாறு அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளும் விடுத்த கோரிக்கைகளையும் இலங்கை நிராகரித்துள்ளது. அமெரிக்க விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. போர்க்கப்பல்களை அனுப்ப ஈரான் விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மனிதாபிமான ரீதியில் உதவி கோரப்பட்டால், அதை வழங்கத் தயங்க மாட்டோம் என்றும் திசாநாயக்க குறிப்பிட்டார். கடந்த2026 மார்ச் மாதம், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானியக் கப்பலின் மாலுமிகளுக்கு இலங்கை மருத்துவமனைச் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செப்டம்பர், 2026 மாதம் 3 நாள் பயணமாக இலங்கை சென்று, கொழும்பில் திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசியிருந்தார். அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு, அமைதி, வளம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகளுக்கு இலங்கையின் பகுதிகளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்தச் சந்திப்பின்போதும் திசாநாயக்க உறுதியளித்திருந்தார்.

இதையும் படிக்க : பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை இலங்கை அதிபரிடம் தெரிவித்த ராஜ்நாத் சிங், அதிபராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகவும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நெருங்கிய அண்டை நாடுகளாக இணைந்து செயல்படுவது, இருநாட்டு மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காகக் கடல்சார் கூட்டாண்மையைத் தொடர்வது, பிராந்தியப் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் இரு நாடுகளும் தங்கள் உறுதிப்பாட்டை அப்போது மீண்டும் வெளிப்படுத்தின.

எந்தவொரு ராணுவ மோதலிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே இலங்கையின் நோக்கம் என்பதையும், இந்தியாவுக்கு எதிராகத் தனது நிலப்பரப்பையும் வான்பரப்பையும் பயன்படுத்த அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டையும் திசாநாயக்கவின் இந்தப் பேச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Follow Us