AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்சி டூ யாழ்ப்பாணம் விமான சேவை.. 45 நிமிட பயணம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா!

Trichy To Jaffna Flight Fare Details : திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விமான பயணத்துக்கான கட்டணம் எவ்வளவு, பயண நேரம் எவ்வளவு என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

திருச்சி டூ யாழ்ப்பாணம் விமான சேவை.. 45 நிமிட பயணம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Oct 2026 20:37 PM IST

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இதற்கு, மக்கள் மத்தியில் போதிய வரவேற்பும் இருந்து வந்தது. ஆனால், காலப்போக்கில் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, இலங்கை செல்லும் பயணிகள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, இண்டிகோ நிறுவனம் சார்பில் நேற்று வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணத்திற்கு விமானம் சென்று வர தொடங்கி உள்ளது.

திருச்சி- யாழ்ப்பாணம் விமான கட்டணம்- பயண நேரம்

இதில், திருச்சி டூ யாழ்ப்பாணத்துக்கு ஒரு வழி பயண கட்டணமாக ரூ.6,120 முதல் ரூ. 7,120 வரை தொடங்குகிறது. இரு வழி பயண கட்டணமாக ரூ. 17,160 முதல் ரூ. 17,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் பயணம் செய்யும் தேதி, முன்பதிவு செய்யும் நேரம் மற்றும் இருக்கைகளின் தேவையை பொருத்து மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியும். இந்த விமான சேவையானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விஜய் Chief Minister- ஆக இருக்க வேண்டுமே தவிற Cheap Minister- ஆக இருக்க கூடாது.. மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!

திருச்சி – யாழ்ப்பாணம் விமானம் புறப்படும் நேரம்

இந்த விமானமானது திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு 1.50 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 3:25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். பல ஆண்டு இடைவேளைக்கு பிறகு நேற்று வியாழக்கிழமை தொடங்கிய விமான சேவையில் முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ விமானத்தில் 45 பயணிகள் பயணம் செய்தனர்.

விமான சேவை தொடர வேண்டும் என பயணிகள் கருத்து

இதே போல, திருச்சி விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் 44 பயணிகள் பயணம் செய்திருந்தனர். இந்த விமான சேவை தொடக்கமானது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் விமான பயணிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி- யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதன் காரணமாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்.. வீ த லீடர்ஸ் அண்ணாமலை!

Follow Us