விஜய் Chief Minister- ஆக இருக்க வேண்டுமே தவிற Cheap Minister- ஆக இருக்க கூடாது.. மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
M. K. Stalin Campaign: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் Chief Minister- ஆக நடந்து கொள்ள வேண்டுமே தவிர, Cheap Minister- ஆக நடந்து கொள்ளக் கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தாராபுரத்தில் கடுமையாக விமர்சித்து பேசினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 2- ஆம் தேதி) பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: சி.எம். சார்.. ப்ரோ… கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஏன் இவ்வளவு பயம்… தைரியம் இருந்தால் சொல்லுங்கள்… என்ன தயக்கம்.. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு குறைவாக இருந்த விலைவாசி தற்போது விண்ணை முட்டி உள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலை மற்றும் உயரவில்லை. கொலை சம்பவமும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 கொலைகள், 8 கொலைகள் நிகழ்கின்றன. போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுத்த நபரை கொலை செய்கிறார்கள்.பாஜக என்றால் அவ்வளவு பயமா சிஎம் சார்.. நீங்கள் Chief Minister- ஆக நடந்து கொள்ள வேண்டும்.. ஆனால், Cheap Minister- ஆக நடந்து கொள்ளக் கூடாது.
தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் மேலும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வேண்டிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் எங்கே சென்றனர். இவற்றையெல்லாம் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய்க்கு தெரிவதில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து பதில் சொல்லக்கூடிய பொறுப்பை மற்ற அமைச்சரிடம் கொடுத்து விடுகிறார். அரசு பதவியில் ஜோசியர் நியமனம். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக அரசாணைகள் வெளியிடுவது. சட்டம் ஒழுங்கு குறித்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற முடியாது என்று அரசாணை வெளியிட்டது.
மேலும் படிக்க: ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. இலங்கைக்கு ரூ.75 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கடத்த முயற்சி.. ஒருவர் அதிரடி கைது!




தமிழகத்துக்கான முதலீடுகள் ஆந்திரா சென்றுவிட்டது
இதன் காரணமாக தமிழகத்துக்கு வரக்கூடிய முதலீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு சென்றுள்ளது. ஆட்சி என்றால் என்னவென்று தெரியாத கூட்டத்திடம். தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத கட்டணம் இல்லாத பேருந்து பயணத்தை ஆட்சிக்கு வந்த உடனே தொடங்கி வைத்தது திமுக அரசு. படிக்கும் மாணவர்களுக்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தவெக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள்
தவெக ஆட்சியில் வெற்றி மின்வெட்டு திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டெண்டர் வெளியிடுவதற்கு முன்னதாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணிகள் மேற்கொள்வது, மேட்டூர் அணையை திறக்க முதல்வர் சென்றபோது 5 கோடியில் தடுப்பு கம்பிகள் அமைத்தது என புதுவிதமான ஊழலை தவெக அரசு உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்.. வீ த லீடர்ஸ் அண்ணாமலை!