AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அம்மா இல்லாத உலகில் வாழ முடியாது.. சோகத்தின் உச்சத்தில் அண்ணன்-தம்பி.. சென்னை லாட்ஜில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

Chennai Crime : சென்னையில் தனியார் லாட்ஜில் சகோதரர்கள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தூக்கிட்டி நிலையில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாகப போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்மா இல்லாத உலகில் வாழ முடியாது.. சோகத்தின் உச்சத்தில் அண்ணன்-தம்பி.. சென்னை லாட்ஜில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
கோப்புப் படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Oct 2026 15:17 PM IST

சென்னை, பெரியமேடு ரங்கய்யா தெருவில் தனியார் லாட்ஜ் அமைந்துள்ளது. இங்கு, 2 இளைஞர்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு இந்த இளைஞர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில், பெரியமேடு போலீசார் லாட்ஜுக்கு சென்று இளைஞர்கள் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, 2 இளைஞர்களும் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் அழுகியவாறு கிடந்தனர். இதை பார்த்து போலீசாரும், லாட்ஜ் ஊழியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, இருவரது சடலங்களையும் தூக்கில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விருதுநகரை சேர்ந்த சகோதரர்கள்

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் விருதுநகர் மாவட்டம், ரோஷப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்த கார்த்திக் ( 28 வயது), வினோத் ( 21 வயது) என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்களது தந்தை மற்றும் தாய் குடும்பத்திற்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதில், ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞர்களின் தாய் உமா மலர் தேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க: போளூரில் பெருஞ்சோகம்.. கிணறு தோண்டியபோது மண் சரிந்து விபத்து.. இருவர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழப்பு!

தாயுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற சகோதரர்கள்

உமா மலர் தேவிக்கும், அவரது கணவர் ராஜூவுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரு மகன்களுடன் உமா மலர் தேவி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, அவரது மகன்கள் இருவரும் கடன் வாங்கி புதிதாக வீடு கட்டி உள்ளனர். இந்த வீட்டில் கார்த்திக் மற்றும் வினோத் ஆகியோர் தனது தாய் உமா மலர் தேவியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில், உமா மலர் தேவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மகன்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தாய் இல்லாத உலகில் வாழ விருப்பமில்லை

இதில், மன வேதனை அடைந்த சகோதரர்கள் தாய் இல்லாத இந்த உலகில் வாழ்வதற்கு விருப்பம் இன்றி இருவரும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். இதற்காக, விருதுநகரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து லாட்ஜில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்

Follow Us