AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் Party Fund.. உத்தமர் வேஷம் போடும் விஜய் எங்கே?.. ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்!

DMK R.S. Bharathi Alleged TVK Accepted Party Fund : அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிதி வாங்கி இருப்பதாகவும், இதில், ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றார் ஆர்.எஸ். பாரதி.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் Party Fund.. உத்தமர் வேஷம் போடும் விஜய் எங்கே?.. ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்!
ஆர்.எஸ்.பாரதி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Oct 2026 20:00 PM IST

தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இதில் தவெக கட்சி நிதி வாங்கி இருப்பதாகவும், இதில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழலை ஒழிக்கும் தூய ஆட்சி போல வேஷம் போட்ட தவெக அரசின் முகமூடியை நீதிமன்றம் கிழித்து எறிந்துள்ளது. ஆட்சி அமைத்த சில காலங்களிலேயே அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் கட்சி நிதி திரட்ட தவெக அரசு தொடங்கி விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சுமார் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை வசூலித்துள்ளதாக தவெகவை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசுந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ரூ. 15 லட்சம் வரை பேரம்

இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்த வழக்கறிஞர் ஞான சுந்தரியை கட்சியில் இருந்து நீக்கி வழக்கை மூடி மறைக்க பார்த்தது தவெக அரசு. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு ரூ. 15 லட்சம் வரை பேரம் பேசிய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோக்கள் வெளியாகி இருந்தது.

மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!

விஜய் அரசுக்கு நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி

இது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தவெக அரசை நன்றாக வெளுத்துள்ளது. லஞ்சம் கொடுத்து வழக்கறிஞர்களாக வர வேண்டுமா. இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தை காப்பாற்றுவார்களா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அத்துடன், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது விஜய் அரசுக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி ஆகும்.

நீதிமன்ற மேஜையில் தவெகவினரின் ஊழல் கோப்புகள்

உத்தமர் வேஷம் போடும் முதல்வர் விஜய் எங்கே போனார். அவர் எதற்காக அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் பற்றி புகார் வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளவில்லை. திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்குமா. இல்லை நீதிமன்றம் உத்தரவிடும் வரை காத்திருக்குமா. எனது மேஜையில் ஊழல் கோப்புகள் இருப்பதாக கதை விட்ட முதல்வர், தவெகவினரின் ஊழல் கோப்புகள் தான் நீதிமன்றத்தின் மேஜையில் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க : தவெக கூட்டணிக்கு பாமக வந்தால்… விசிக வெளியேறிவிடும்.. கட்சியின் பொருளாளர் தடாலடி!

Follow Us