சென்னை வாசிகளுக்கு மெகா குட் நியூஸ்.. இனி பரனூர் டோல்கேட்டில் நிக்கவே வேண்டாம்… வந்துச்சு புது டெக்னாலஜி!
Paranur Toll Plaza Automated Toll Collection System : பரனூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணத்தை விரைந்து பெறுவதற்காக புதி ய தொழில் நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைந்து செல்ல முடியும் .
சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. சென்னையின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள டோல்கேட்டுகளில் பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் பொது மக்களின் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை, தவிர்ப்பதற்காக பரனூர் சுங்கச்சாவடியில் தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பரனூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் சுங்கச்சாவடி கட்டணம் அவர்களின் பாஸ்ட்டேக்கில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும். இதற்கு சுங்கச்சாவடிக்கு முன்பாக சில மீட்டர்கள் தொலைவில் அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண் உள்ளிட்டவை துல்லியமாக படம் பிடிக்கப்பட்டு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படும்.
தானியங்கி டோல் கட்டண முறையால் என்ன பலன்
இந்த புதிய நடைமுறை மூலமாக சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருந்து சுங்க கட்டணம் செலுத்த தேவை இருக்காது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், பொதுமக்களின் பயண நேரம் அதிகரிப்பதும் தவிர்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சில நிமிடங்கள் வரை லேனில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து அதிகமாக உள்ள நாட்களில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்பதால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பரனூர் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
மேலும் படிக்க: தஞ்சாவூரில் சத்தமின்றி நடந்த பெரிய ஆபரேஷன்.. கிலாபத் இயக்கத்தில் தொடர்புடைய 6 பேர் கைது.. எஸ்ஐடி குழு அதிரடி!




பரனூர் சுங்கச்சாவடியில் விரைந்து செல்லலாம்
தற்போது, இந்த சுங்க சாவடியில் அதே நவீன செயற்கை நுண்ணறிவு ( ஏ.ஐ.) கேமராக்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் அந்த இடையூறு தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும்போதோ அல்லது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும்போதோ பரனூர் சுங்கச்சாவடியில் சில நிமிடங்கள் காத்திருப்பது தவிர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய நடைமுறையானது இன்று அக்டோபர் 1- ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் செயல்படும் விதம்
இந்த சுங்கச்சாவடியில் ஆர். எப். ஐ. டி. ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், ஏ.என்.பி.ஆர்., கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வாகன எண்களையும், பாஸ்ட் டேக் கணக்கையும் சில நொடியில் கணக்கிட்டு அதற்கான கட்டணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும். பாஸ் டேக் செயல்படாத போது, வாகன எண் வாயிலாக மாற்று வழியில் கட்டணம் வசூலிக்கப்படும். பாஸ்ட் டேக், போதிய பேலன்ஸ் இல்லாத போது அபராத செல்லான் அனுப்பப்படும்.
மேலும் படிக்க: திருச்சி அருகே கோர விபத்து.. லாரி – கார் பயங்கர மோதல்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவர் மரணம்!