AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!

Gem Veeramani Harassment Case : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமியின் தாய் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார். இதனால், இந்த வழக்கு வேகம் பெற்றுள்ளது.

ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!
ஜெம் வீரமணி வழக்கில் எஸஐடி குழு விசாரணை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Sep 2026 08:10 AM IST

தமிழகத்தில் சுமார் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிகள் மற்றும் பெண்கள் புகார் அளிக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி, ஏற்கனவே இவர் மீது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் தாய் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு சிறுமியின் தாய் சிறப்பு புலனாய்வு குழுவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மகள் பள்ளி வகுப்பு பயின்று வந்த போது, படிக்க வைப்பதாக கூறி வீரமணி ஒரு நாள் தனது காரில் தனியார் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

வீரமணி மீது மற்றொரு பாலியல் புகார்

இந்த புகாரை பெற்றுக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் எஸ். ஐ. டி. குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில், விரைந்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரும் வகையில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் எஸ். ஐ. டி. குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் பாணியில் களமிறங்கிய அமைச்சர் அருண்ராஜ்.. தாராபுரம் மக்களை கவர புதிய யுக்தி!

ரூ. 70 கோடி கைமாறிய விவகாரம் குறித்து விசாரணை

இந்த வழக்கில் வீரமணியை விடுவிப்பதற்காக காவலர்களுக்கு ரூ.70 கோடி கைமாற்றப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், அமலாக்கத்துறை களமிறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜாமீன் கோரி இருவர் மனு தாக்கல்

இதில், காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாந்தி, மகேந்திரா சிம்ஹன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினரை மிரட்டவும் வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு!

Follow Us