AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு!

Tamilnadu 13 IPS Officer Transferred : தமிழகத்தில் 13 ஐ. பி. எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Sep 2026 19:02 PM IST

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், சேலம் காவல் ஆணையராக இருந்த ஜோசி நிர்மல் குமார் ஐ. பி. எஸ். காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெருநகர சென்னை காவல்துறை ஐ. ஜி. ஆக இருந்த ஏ. ஜி. பாபு ஐ. பி. எஸ்., சேலம் காவல் ஆணையராகவும், சேலம் சரக காவல் இணை ஆணையராக இருந்த சந்தோஷ் ஹதிமானி ஐ. பி. எஸ். சென்னை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி. ஐ. ஜி. ஆக இருந்த என். தேவராணி ஐ. பி. எஸ். சேலம் சரக டி. ஐ. ஜி. ஆகவும், கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்பு பிரிவு  காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் ஐ. பி. எஸ். அடையாறு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி

கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த  காவல் கண்காணிப்பாளர் ஏ. சி. கார்த்திகேயன் ஐ. பி. எஸ். தமிழ்நாடு சீருடை பணிகள் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராகவும், போதப்பொருள் புலனாய்வு பிரிவு- குற்றப் புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளராக இருந்த மதிவாணன் சென்னை பரங்கிமலை துணை ஆணையராகவும், சென்னை சின்ன மலை துணை ஆணையராக இருந்த வி. ஆர். சீனிவாசன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!

சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய எஸ்பி

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த கே. ஸ்டாலின் சென்னை சி. பி. சி. ஐ. டி. தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக நியமனம். பெருநகர சென்னை பாதுகாப்பு காவல் துணை ஆணையராக இருந்த சுந்தர வடிவில் சென்னை காவல் நலன், நிலங்கள் பிரிவு துணை ஆணையராகவும், பெருநகர சென்னை மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த வி. பாஸ்கரன் ஐ. பி. எஸ். சேலம் வடக்கு துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி

வண்ணாரப்பேட்டை துணை சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த அங்கீத் சிங் சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும்,  காத்திருப்போர் பட்டியலில் இருந்த டாக்டர். ஆர். ஸ்டாலினுக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!

Follow Us