தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொலைகள்.. முதல்வர் மிக்சர் சாப்பிடுவதை நிறுத்துக.. கடும் நடவடிக்கை எடுத்திடுக.. உதயநிதி அதிரடி அட்டாக்!
Udhayanidhi Stalin Latest Speech : தமிழகத்தில் நாள் தோறும் கொத்துக் கொத்தாக கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் சட்டம்- ஒழுங்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
திருநெல்வேலியில் இன்று இரட்டை கொலை. சென்னையில் இளைஞர் கொலை என ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்றுடன் சேர்த்து 9 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில், தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பட்ட பகலில் இரட்டை கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு இப்படி இருக்கும் நிலையில் டம்மி முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அண்மை காலமாக கொலைகள் அதிகம் பதிவாகி இருப்பது குறித்து முக்கிய தகவல்களுடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளோம். அதில், எந்த கேள்விக்கும் முறையான பதில் தற்போது வரை கிடைக்கவில்லை.
டம்மி முதல்வர் விஜய் என்ன செய்துகொண்டிருக்கிறார்
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய அண்ணன், தம்பி பட்டப் பகலில் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பனை செய்த போது ஏற்பட்ட போட்டியில் அஜித் என்ற இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பரபரக்கும் ஜெம் வீரமணி விவகாரம்.. அடுத்தடுத்து பாயும் போக்சோ வழக்குகள்.. எஸ்.ஐ.டி. குழு முக்கிய அறிவுறுத்தல்!
தவெக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை
தமிழகத்தில் குற்றத்தை தடுக்க வேண்டிய காவலர்களுக்கும், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பை தடுக்க முற்பட்ட பெண் காவலர் ஒருவர் கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது மட்டும் இன்றி, மயிலாடுதுறை- திருவண்ணாமலை- சேலம்- கன்னியாகுமரி- தேனி- கூடலூர் ஆகிய ஊர்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறாக தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், யாருக்குமே பாதுகாப்பு இல்லாத இந்த ரீல்ஸ் ஆட்சியை முதல்வர் விஜய் யாருக்காக நடத்திக் கொண்டிருக்கிறார். இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் ஜோசப் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கண்டன அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நெல்லையை உலுக்கிய பயங்கரம்.. ஒரே நாளில் 2 கொலைகள்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சோகம்!