நெல்லையை உலுக்கிய பயங்கரம்.. ஒரே நாளில் 2 கொலைகள்.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சோகம்!
Nellai Town Double Murder : திருநெல்வேலியில் கோயில் தகராறில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்பட இரு முதியவர்களை ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இந்தச் சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், டவுன் மணிப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் டால்டன் ( 70 வயது). இவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் ( 78 வயது). இதில், டால்டன் என்பவர் டவுன் பகுதியில் சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், மணிப்புரம் பகுதியில் உள்ள கோவில் தொடர்பான தகராறில் டால்டன், நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகியவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் இடையே இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 29- ஆம் தேதி) டால்டன் நடத்தி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அவர்களுடன் செந்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில், அவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை திடீரென வாக்குவாதமாக மாறி உள்ளது.
2 முதியவர்களை கத்தியால் சரமாரியாக குத்திய நபர்
இதில், கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போது, செந்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகியோரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில், இருவரும் பலத்த வெட்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி சரிந்தனர். உடனே, பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த ஊழியர்கள் அவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முதியவர் டால்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: “ஈ” டா… “ஈ” டா… ஈக்கள் தொல்லையால் அலறும் செங்கல்பட்டு மக்கள்.. ஸ்தம்பித்த இயல்பு வாழக்கை!




அடுத்தடுத்து உயிரிழந்த அண்ணன்- தம்பி
அவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ் முக் மற்றும் காவல் துணை ஆணையர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
டவுண் போலீசார் தீவிர விசாரணை
தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கோவில் தகராறு மற்றும் இட தகராறில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், செந்தில் உள்பட 3 பேர் மீதும் காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்க்காக கணவன்- மகனுக்கு மொட்டை.. நேர்த்திக்கடன் செலுத்திய தீவிரமான பெண் விசிறி.. மதுரையில் நெகிழ்ச்சி!