AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“ஈ” டா… “ஈ” டா… ஈக்கள் தொல்லையால் அலறும் செங்கல்பட்டு மக்கள்.. ஸ்தம்பித்த இயல்பு வாழக்கை!

Ponneri Municipality Flies : பொன்னேரி நகராட்சி பகுதியில் அதிகளவு மொய்த்து வரும் ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நகராட்சி ஊழியர்கள் மருந்து தெளித்து வருகின்றனர். இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் .

“ஈ” டா… “ஈ” டா… ஈக்கள் தொல்லையால் அலறும் செங்கல்பட்டு மக்கள்.. ஸ்தம்பித்த இயல்பு வாழக்கை!
ஈக்களை கட்டுப்படுத்த மருந்து அடித்த ஊழியர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 28 Sep 2026 19:43 PM IST

செயல்பட்டு மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியில் அப்துல் கலாம் நகர் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 100- க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் திருமண மண்டபங்கள், டீ கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் அதிக அளவிலான ஈக்கள் படையெடுத்து வருகிறது. இவை, வீடுகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் குவிந்து வருகிறது. இதன் காரணமாக, வீடுகளில் உள்ள பாத்திரங்கள், உணவுகள், துணிகள் உள்ளிட்ட பொருட்களில் அதிக அளவு ஈக்கள் மொய்த்து வருகின்றன. இதனை விரட்டுவதற்கு அப்பகுதி மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாக, பொதுமக்கள் சரியாக சாப்பிடவும், குடிநீர் அருந்தவும் முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று

இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தப் பகுதி மக்கள் பொன்னேரி நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், அந்த பகுதி முழுவதும் வீடுகளை சுற்றி மருந்து அடிக்குமாறு உத்தரவிட்டனர். அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் ஈக்களை விரட்டுவதற்காக மருந்துகள் அடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்களை பிச்சையெடுத்து கட்சி நடத்த வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதே காரணம்

இது தொடர்பாக, அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆரணி ஆற்றின் கரை ஓரம் கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் அதிக அளவில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்த்து வருகிறது. அத்துடன், அவை பெருக்கம் அடைந்து, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் குவியல், குவியலாக பறந்து வந்து தொந்தரவு செய்கிறது. இதனால், வீட்டின் உள்ளே உட்காரவும், சாப்பிடவும் முடியாமல் அவதி அடைந்து வருகிறோம்.

உணவு பொருள்களில் மொய்க்கும் ஈக்கள்

இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது, உணவுகள், தின்பண்டங்கள், குடிநீர் உள்ளிட்ட பொருள்களில் அதிகளவு ஈக்கள் மொய்த்து வருகிறது. இதன் காரணமாக பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சில படங்களில் வருவது போல குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு ஈக்கள் மொய்த்து வருவதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம்.. எப்போது, எங்கு வழங்கப்படும்.. இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க தாய்மார்களே!

Follow Us