தாய்மாமன் தங்க மோதிரம்.. எப்போது, எங்கு வழங்கப்படும்.. இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க தாய்மார்களே!
Thai Maman Thanga Mothiram Scheme : தமிழகத்தில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் என்ன. அந்த மோதிரம் எப்போது வழங்கப்படும் என்ப உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், அடிப்படை தகுதிகள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்பது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 22 காரட் ( 916 தரம்) ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுவதாகும். இந்த மோதிரத்தில், தமிழக அரசின் சின்னம், பி. ஐ. எஸ். ஹால்மார்க் முத்திரை, வரிசை எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.2 லட்சம் முதல் 4.4 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.
மேலும் படிக்க: மதுரையில் 44.7 கி.மீ.க்கு இரும்பு தடுப்பு… ரூ. 3.8 கோடி வீண் செலவு? நலத்திட்டங்களுக்கு செலவு செய்திருக்கலாம் என கருத்து!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான தகுதி
- இந்த திட்டத்தில் பயன் பெறுவோர் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தமிழகத்தில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
- குழந்தைகள் அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்டம் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவர்.
- தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தகுதியில்லை. தாய் அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்- அதற்கான அடையாள எண் பெற்றிருக்க வேண்டும்.
- பிறப்பு வரிசை, பாலினம் ( முதல் குழந்தை, 2- ஆவது குழந்தை என எந்த வரிசையாக இருந்தாலும்) கட்டுப்பாடு இல்லை.
- இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் 2 தங்க மோதிரங்கள் வழங்கப்படும். பலமுறை பிரசவித்த தாய்மார்களுக்கும் இதில் கட்டுப்பாடு கிடையாது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணி தாய்கள் அரசு அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை மருத்துவமனையில் சமர்ப்பிக்க வேண்டும். இதில்,
- ரேஷன் கார்டு.
- ஆதார் அடையாள அட்டை.
- வாக்காளர் அடையாள அட்டை.
- அஞ்சல் துறை முகவரி சான்று.
- தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை.
- பிறப்பிட சான்றிதழ் (அ) இருப்பிட சான்றிதழ்.
- தாய் அமைப்பில் பதிவு சான்று.
- தாயின் ஆதார் அட்டை.
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை பிரசவ பதிவு சான்று.
தங்க மோதிரம் எப்போது வழங்கப்படும்
தாய்மார்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது மோதிரம் வழங்கப்படும். சில இடங்களில் முக அடையாளம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படும். கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்பில் முன்பு ரூ. 12,000 உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டு, அதற்கான நிதியை தான் தங்க மோதிரம் திட்டமாக மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்களை பிச்சையெடுத்து கட்சி நடத்த வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!