மதுரையில் 44.7 கி.மீ.க்கு இரும்பு தடுப்பு… ரூ. 3.8 கோடி வீண் செலவு? நலத்திட்டங்களுக்கு செலவு செய்திருக்கலாம் என கருத்து!
Chief Minister Vijay Visit Madurai : மதுரையில் முதல் அமைச்சர் விஜய் வருகைக்காக சுமார் 44.7 கிலோமீட்டர் தொலைவுக்கு தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சுமார் ரூ.1.7 கோடி முதல் ரூ. 3.5 கோடி வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் ஆகியவற்றை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திங்கள்கிழமை ( செப்டம்பர் 28- ஆம் தேதி) தொடங்கி வைத்தார். இதற்காக, அவர் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை வந்திருந்தார். இவரை பார்ப்பதற்காக பல்வேறு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் ஆகியோர் திரண்டு இருந்தனர். இவர்கள் சாலையின் மையப்பகுதிக்கு வராமல் இருப்பதற்காக, பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் சுமார் 44.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதற்கு, சுமார் ரூ. 1 கோடியை 8 லட்சம் முதல் ரூ. 3 கோடியே 6 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
44.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 3.8 கோடி வரை செலவு
அதாவது அரசு, விஐபி பங்கேற்கும் விழாக்களுக்கு தற்காலிக இரும்பு அல்லது மர தடுப்பு ஆகியவை பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும். இதனை அமைப்பதற்கு சுமார் ஒரு மீட்டருக்கு ரூ. 200 முதல் ரூ. 400 வரை கணக்கிடப்படுகிறது. இந்த தொகையானது மேற்கண்ட தடுப்புகளின் வாடகை போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் கூலிக்காக வழங்கப்படுகிறது. அதன்படி, குறைந்தபட்சம் 1 மீட்டருக்கு ரூ. 200 என கணக்கில் எடுத்துக் கொண்டால் 44.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 1 கோடியே 79 லட்சம் வரை வருகிறது. இதே போல, ஒரு மீட்டருக்கு ரூ. 400 என 44.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 3 கோடியை 58 லட்சம் வரை வருகிறது.
மேலும் படிக்க: கேரளத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய தமிழக நபர்.. லாட்டரியில் பரிசு விழாத ஆத்திரத்தில் வெறிச்செயல்!
சேலத்தில் முதல்வர் வருகைக்கு ரூ.4.5 கோடி செலவு
இவ்வளவு பெரிய தொகையை பாதுகாப்புக்காக செலவு செய்திருக்க வேண்டாம் எனவும், இதனை மக்களின் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, அண்மையில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை நீரை திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் சென்றிருந்தார். அங்கு, இதுபோன்று சாலையின் ஓரங்களில் தற்காலிகமான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு ரூ. 4.5 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தன.
மதுரைக்கு விஜய் வருகிறாராம்.
வந்துட்டு போகட்டும்…அதுக்கு எதுக்கு யா ஊரு பூரா வேலி கட்டின மாதிரி இப்படி Barrciade போட்டு வச்சிருக்கீங்க?
என்ன ஏதும் ரோமானியப் பேரரசர் வராரா?
முதல்வர் தானே ?
மக்கள் வாக்கு செலுத்தி வந்தவர் தானே?
இல்ல வானத்துல இருந்து குதிச்சாரா ?மக்கள் இவரை… pic.twitter.com/Q625vKAKje
— EPS 24×7 (@edapadiyaar_) September 27, 2026
தடுப்பு வேலிக்கு ஏன் வீண் செலவு
மேட்டூர் அணை சுமார் 45 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருப்போம். இதை நம்பி குருவை சாகுபடி செய்ய முடியாது. இப்படி இருக்கும் நிலையில், முதல்வரின் பாதுகாப்புக்காக இவ்வளவு கோடி செலவு செய்யப்பட்டிருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மதுரையிலு் இத்தனை கோடிக்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: பரபரக்கும் ஜெம் வீரமணி விவகாரம்.. அடுத்தடுத்து பாயும் போக்சோ வழக்குகள்.. எஸ்.ஐ.டி. குழு முக்கிய அறிவுறுத்தல்!