AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருமண நாளில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டம்.. தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை வெளியீடு..

Annan Seer Scheme: விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிகள் சரிபார்க்கப்படும். தகுதியுடையவர்கள் திருமண அழைப்பிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். மேலும், விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

திருமண நாளில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டம்.. தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை வெளியீடு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2026 17:31 PM IST

நவம்பர் 17, 2026: தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், திருமண நாளில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை ஆகியவற்றை அண்ணன் சீராக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதிகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

யாரெல்லாம் பயன்பெறலாம்?

  • திருமணத்திற்கான மணமக்கள் இருவரும் குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  • மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும், குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • திருமண நிதியுதவி தொடர்பான பிற அரசு திட்டங்களின் கீழ் ஏற்கெனவே பயன் பெற்றவர்களும் இத்திட்டத்தின் தகுதி விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும்.

மேலும் படிக்க: செல்போன் வாங்குவது போல நடித்து சம்பவம்.. ரூ.25 ஆயிரம் செல்போன் நூதன திருட்டு.. கோவையில் பட்டப்பகலில் கைவரிசை!

எப்படி விண்ணப்பிப்பது?

  • திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
  • 2026 அக்டோபர் 5 முதல் 2027 ஜனவரி 15 வரை நடைபெறும் திருமணங்களுக்கு, 2027 ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் சரிபார்க்கப்படும் முறை

விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிகள் சரிபார்க்கப்படும். தகுதியுடையவர்கள் திருமண அழைப்பிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.

மேலும் படிக்க: 3 ஆண்டுகளாக நடக்கும் ஊழல்.. தமிழக நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.1.74 கோடி முறைகேடு – அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மேலும், விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், அந்தத் திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.

நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம்

தகுதியின்மை காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் நிராகரிப்பு முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுடைய பெண்களுக்கு திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது.

Follow Us