AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மக்கள் வரிப்பணத்தில் டெல்லி பயணமா? தவெக ஆட்சியில் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து.. திமுக விடுத்த எச்சரிக்கை!

DMK Paranthaman : மேகதாது விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் மெத்தன போக்கால் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து வரும் என்று திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பரந்தாமன் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மக்கள் வரிப்பணத்தில் டெல்லி பயணமா? தவெக ஆட்சியில் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து.. திமுக விடுத்த எச்சரிக்கை!
முதல்வர் விஜய்- திமுக பரந்தாமன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 17 Nov 2026 13:46 PM IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று டெல்லி சென்று வந்தார். அங்கு, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த நிகழ்வில், காவிரி நீர் பிரச்சனை, மேகதாது அணை உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் விஜய் ஏன் பேசவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இது தொடர்பாக, திமுகவின் வழக்கறிஞர் அணி பரந்தாமன் கூறியிருப்பதாவது: மக்கள் வரிப்பணத்தில் தனி விமானம் மூலமாக டெல்லி சென்று வந்த தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய், அங்கு தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான காவிரி மற்றும் மேகதாது தொடர்பாக பேசாதது ஏன்.

மக்கள வரிப்பணத்தில் டெல்லி பயணமா

தமிழக அரசியல் களத்தில் காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், மக்கள் வரிப்பணத்தில் தனி விமானம் மூலமாக டெல்லி முதல்வர் விஜய் இது தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் டி. கே. சிவகுமாரிடம் பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காப்பது ஏன். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்த முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: தமிழக சட்டசபை குளிர்கால கூட்ட தொடர் நடக்குமா? அரசு வட்டாரத்தில் கசியும் தகவல்.. என்ன அது!

மேகதாது குறித்து விவாதிக்காகதது ஏன்

ஆனால், மேகதாது அணை, காவிரி நீர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்காதது ஏன் என்றும், இது தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த மெத்தன் போக்கும், அலட்சியமும் தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரியை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் பால் பட்டு பாலைவனமாக மாறும் அபாய நிலை உள்ளது. பொதுமக்களின் கவனத்தை மடை மாற்ற டெல்லி சென்று புத்தக ஊழல் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்துள்ளார்.

தவெக அரசின் மெத்தனத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு

தமிழக வெற்றுக் கழக அரசின் மெத்தன போக்கால் தமிழகத்துக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கண்டிப்பாக கட்டியே தீருவோம் என்று அம் மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், பெரிதாகி உள்ள நிலையில், முதல்வர் விஜய் தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தகைய விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: திருச்செந்தூர் பாடல் சர்ச்சை! யாரை யாருடன் ஒப்பிடுவது.. வேல்முருகன் பண்ணது அநியாயம்.. கொந்தளித்த பெண் முருக பக்தர்!

Follow Us