வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் எடுத்துச்செல்ல தடையில்லை – தமிழக அரசின் உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Chennai Bank Account Hacking Case : தமிழ்நாட்டில் இருந்து கருங்கல், ஜல்லிகற்கள் போன்ற கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து, சேமிப்பு, தடுப்பு திருத்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவம்பர் 17 : தமிழ்நாட்டில் இருந்து கருங்கல், ஜல்லிகற்கள் போன்ற கனிமங்களை (Minerals) வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கருங்கல், ஜல்லிகற்கள் போன்ற கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தடை விதிக்க வழிவகை செய்த தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து, சேமிப்பு, தடுப்பு திருத்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ‘முதல்வரை சாட்சியாக வைத்தேன்… ‘ – முதல்வருக்கு அரோகரா என பாடிய சர்ச்சை – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்




தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கருங்கல், ஜல்லி மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும், இதனால் உள்ளூர் கட்டுமானப் பணிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், கனிமங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த குவாரி உரிமையாளர்கள், சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்து. மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி மற்றும் ராயல்டி செலுத்தி கொண்டு செல்லப்படும் கனிமங்களைத் தடுப்பது சட்டவிரோதம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் கருங்கல், ஜல்லி, மணல் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசின் உரிய அனுமதிச் சீட்டு, ஜிஎஸ்டி ஆவணங்கள் மற்றும் கனிமவளத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு கனிமங்களைக் கொண்டு செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தடை விதிக்க வழிவகை செய்த தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து, சேமிப்பு, தடுப்பு திருத்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தீபம் ஏற்ற தயாராகும் தமிழகம்.. மிரள வைக்கும் அகல் விளக்கு தயாரிப்பு பணி.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வர்த்தக உரிமையை நிலைநாட்டியிருப்பதோடு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், சட்டப்பூர்வமான கனிமப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் அரசுக்குப் புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கடத்தப்படுவதை அரசு அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.