1 மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி கொள்ளை – சென்னை தனியார் நிறுவன வங்கிக் கணக்கை ஹேக் செய்த கொள்ளையர்கள் – பகீர் தகவல்
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பல்க்பே என்ற தனியார் நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து, சுமார் ரூ.1 கோடி பணத்தைக் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதிரிப் படம்
சென்னை, நவம்பர் 17 : சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பல்க்பே என்ற தனியார் நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து, சுமார் ரூ.1 கோடி பணத்தைக் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ஒரு மணி நேரத்திற்குள் 24 பரிவர்த்தனைகள் மூலமாக இந்த நூதன சைபர் கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.
Follow Us