AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக சட்டசபை குளிர்கால கூட்ட தொடர் நடக்குமா? அரசு வட்டாரத்தில் கசியும் தகவல்.. என்ன அது!

Tamil Nadu Legislative Assembly Winter Session : தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இந்த ஆண்டு நடைபெறாது என்று சட்டப்பேரவை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை குளிர்கால கூட்ட தொடர் நடக்குமா? அரசு வட்டாரத்தில் கசியும் தகவல்.. என்ன அது!
தமிழக சட்டமன்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 Nov 2026 11:35 AM IST

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு நடைபெறாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத்தொடர் சுமார் 3 அல்லது 4 நாட்கள் கூட்டம் கூட்டப்பட்டு நடைபெறும். அப்போது, துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த நிலையில், முழு நிதிநிலை அறிக்கை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது என்ன தகவல்கள் கூறுகின்றன. பொதுவாக சட்டப்பேரவை கூட்டுத்தொடர் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்திருந்தார்.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் ரத்து

இதைத் தொடர்ந்து, அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு, ஒவ்வொரு துறைகளின் அமைச்சர்கள் பதிலுரை வழங்கி விளக்கம் அளித்திருந்தனர். தொடர்ந்து, வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது செப்டம்பர் மாதம் 9- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்து 2 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யவும் வாய்ப்பு இல்லை என்று சட்டசபை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே குளிர்கால கூட்டத்தொடர் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டசபை கூட்டம் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க: அத்துமீறினா அதிரடி தான்.. லத்தியை கையில் எடுக்கும் சிறை காவலர்கள்.. சிறைத்துறை அதிரடி உத்தரவு!

ஆகஸ்ட் மாதம் முழு நிதி நிலை அறிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கடந்த மே மாதம் 10- ஆம் தேதி ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். பின்னர், முழு நிதி நிலை அறிக்கை தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அரசியலுக்கும், ஆட்சிக்கும் புதிய வரவான தமிழக வெற்றி கழகம் முதல் முறை முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது.

2027- இல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்

இதைத் தொடர்ந்து, வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், மானிய கோரிக்கை விவாதம், முதல்வர் பதிலுரை, அமைச்சர்கள் என சுமார் ஒரு மாத காலம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. 2027 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் மீண்டும் சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது. இந்த நிலையில்தான், குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: 40 நாட்களில் ரூ.1.38 கோடி அபராதம் வசூல்.. பரனூர் டோல்கேட்டில் 3.85 லட்சம் வாகன ஓட்டிகள் செய்த தவறு.. மீறினால் என்ன நடக்கும்!

Follow Us