AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்செந்தூர் பாடல் சர்ச்சை! யாரை யாருடன் ஒப்பிடுவது.. வேல்முருகன் பண்ணது அநியாயம்.. கொந்தளித்த பெண் முருக பக்தர்!

Devotee Condemns Pushpavanam Kuppusamy : திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன் செய்தது அநியாயம், யாரை யாருடன் சேர்த்து பேசுவது, ஆன்மீகத்தையும், அரசியலையும் ஒன்றாக சேர்க்காதீர்கள் என்று முருக பெண் பக்தர் ஒருவர் கண்ணீர் மல்க ஆக்ரோஷத்துடன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் பாடல் சர்ச்சை! யாரை யாருடன் ஒப்பிடுவது.. வேல்முருகன் பண்ணது அநியாயம்.. கொந்தளித்த பெண் முருக பக்தர்!
கண்டனம் தெரிவித்த முருக பெண் பக்தர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 17 Nov 2026 12:22 PM IST

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், சர்ச்சைக்குரிய செயலும் நிகழ்ந்து பல்வேறு கண்டனங்களை பெற்று வருகிறது. கிராமப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் வேல்முருகன் ஆகியோர் சூரசம்ஹார விழாவில் “முருகனுக்கு அரோகரா… தமிழக முதல்வருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா” என்ற கோஷங்களையும், நம் தமிழக முதல்வர் போல் வேல் எடுத்து பகை முடித்த வேலவனின் கால் பணிந்து வேண்டும் வரம் கேளுங்களேன்.. என்று சர்ச்சைக்குரிய வகையில் பாடியிருந்தனர். இதைக் கேட்ட முருக பக்தர்கள் பலரும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு, அரசியல் கட்சியினர், முருக பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பெண் முருக பக்தர் ஒருவர் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆன்மீகத்தையும், அரசியலையும் ஒன்றாக இணைப்பீர்களா

இது தொடர்பாக அவர் கூறுகையில், நான், சென்னை அயனாவரத்தில் வசித்து வருகிறேன். கடந்த 28 ஆண்டுகளாக திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார விழாவில் பங்கெடுத்து வருகிறேன். முருகருக்கு இணை எவரும் கிடையாது. யாருக்கு அரோகரா போட்டு உள்ளீர்கள். ஆன்மீகத்தையும், கட்சியையும் ஒன்றாக இணைப்பீர்களா. சூரசம்ஹாரம் நிகழ்வில் பக்தி பாடல் பாடும் போது எங்கிருந்து சிஎம் வந்தார். எங்கேயோ இருக்கும் அவரை எதற்காக கடவுளுடன் ஒப்பிட்டு பாடல் பாடி உள்ளீர்கள்.

மேலும் படிக்க: ‘முதல்வரை சாட்சியாக வைத்தேன்… ‘ – முதல்வருக்கு அரோகரா என பாடிய சர்ச்சை – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

முருகனுடன் முதல்வரை ஒப்பிட்டு பேசுவதா

கடந்த ஆண்டு தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் இருந்தார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம் அவர்கள் பெயரை குறிப்பிட்டு பாடல் பாடினீர்களா. இந்த தவறை கேட்பதற்கு ஆள்கள் இல்லை என்ற எண்ணத்தில் செய்தீர்களா. இந்த சம்பவம் நடந்த போது நான் கண்ணீர் விட்டு கதறி அழுதேன். நேற்று நான் அழுததற்கு இன்று பலன் கிடைத்துள்ளது. சூரசம்ஹார விழாவில் விழாவில் காவல்துறை பாதுகாப்பு, உணவு தூய்மைப் பணி உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

வேல்முருகன் செய்த காரியம் அநியாயம்

ஆனால், கடைசி நேரத்தில் வேல்முருகன் செய்த காரியம் ரொம்ப அநியாயமாக இருந்தது. எனக்கு வந்த கோபத்துக்கு அவரை அறைந்து விடலாம் என்று தோனியது. அரசியலை, ஆன்மீகத்தில் இணைக்காதீர்கள். ஆன்மீகம் என்பது பெரிய யுகம் ஆகும். கடலை விட பெரியது ஆன்மீகம். ராஜாவை விட பெரியவர் எனது கடவுள். யாரை யாருடன் சேர்ப்பது. தேவையில்லாத காரியங்களை ஆன்மீக வழிபாட்டுத் தலங்களில் எதற்காக செய்கிறீர்கள் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழக சட்டசபை குளிர்கால கூட்ட தொடர் நடக்குமா? அரசு வட்டாரத்தில் கசியும் தகவல்.. என்ன அது!

Follow Us