அதிமுக எம்எல்ஏ-க்களை பிச்சையெடுத்து கட்சி நடத்த வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
Edappadi Palaniswami Latest Speech : அதிமுகவிடம் இருந்து எம்எல்ஏக்களை பிச்சை எடுத்து தமிழக வெற்றிக் கழக ஆட்சியை நடத்த வேண்டுமா என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். முழு விவரத்தை இதில் பார்க்கலாம்.
தாராபுரம் தொகுதி, குண்டடத்தில் அதிமுக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திங்கள்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழக வெற்றிக் கழக ஆட்சியாளர்களுக்கு அரசியலைப் பற்றியும், நாட்டு மக்களையும் பற்றியும் என்ன தெரியும். அதிமுக எம்எல்ஏக்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்து விடுங்கள் என்று பிச்சை எடுத்து கட்சி நடத்த வேண்டுமா. திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் பாதி பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள் ஆவர். அதிமுகவை நம்பி தான் தமிழக வெற்றி கழகம் ஆட்சி நடத்தி வருகிறது. மேடையில் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும் முதல்வர் விஜய் அவர்களே. தமிழக வெற்றி கழகம் தொடங்கிய 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அந்த கட்சியில் அண்மையில் சேர்ந்தவர்கள் அதிமுகவை கரைத்து விடுவோம் என்று மிரட்டல் விடுகின்றனர்.
ஆட்சி என்பது கவர்ச்சியால் நடத்துவது கிடையாது
அதிமுக கறைவதற்கு சாதாரண கட்சி இல்லை. இரும்புக்கோட்டை ஆகும். அதிமுகவை யாரும் அசைக்க முடியாது. ஆட்சி என்பது கவர்ச்சியால் வார்த்தைகளால் நடத்துவது அல்ல ஆட்சி என்பது செயலாகும். திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு தேசிய விருது வாங்க முடியாத முதல்வர் விஜய் ஆட்சியை நடத்துகிறாரா. அரசியலில் என்னை வீழ்த்தலாம் என்று எண்ணினால் அரசியலில் காணாமல் போய்விடுவர். தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் நீங்கள் தீய சக்தி கூட்டணி கட்சிகளின் ஆதரவை ஏன் பெற்றீர்கள். முழு கை சட்டை அணிந்தால் டெங்கு வராது என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார்.
மேலும் படிக்க: பரபரக்கும் ஜெம் வீரமணி விவகாரம்.. அடுத்தடுத்து பாயும் போக்சோ வழக்குகள்.. எஸ்.ஐ.டி. குழு முக்கிய அறிவுறுத்தல்!
சனி, ஞாயிறில் முதல்வரை கையில் பிடிக்கமுடியாது
திரைப்படத்தில் வரும் கவர்ச்சிகரமான வசனங்களை பேசி வாக்கு சேகரிப்பவர் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது . வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அலுவலகத்தில் இருந்து செல்லும் விஜய் அடுத்த திங்கட்கிழமை தான் பார்க்க முடியும். சனி, ஞாயிற்றுக்கிழமை அவரை கையில் பிடிக்க முடியாது. அதிமுகவை நம்பி தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி நடத்துகிறது.
முதல்வர் விஜய் என்ன சாதனை செய்தார்
முதல்வர் விஜய் என்ன சாதனை செய்தார் என்று ஆதவ் அர்ஜுனாவால் சொல்ல முடியுமா. பெண்கள் பாதுகாப்பு குறித்து எந்த முகத்தை வைத்துக்கொண்டு முதல்வர் விஜய் பேசி வருகிறார் என்று தெரியவில்லை. அண்ணன், தாய்மாமன் என்று தனக்கு பிராண்டிங் செய்து கொள்கிறார். மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சிறுமிக்கு தனது சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத ஒரு பொல்லாத ஆட்சியை நடத்துகிறார் முதல்வர் விஜய் என்று பேசினார்.
மேலும் படிக்க: மதுரையில் 44.7 கி.மீ.க்கு இரும்பு தடுப்பு… ரூ. 3.8 கோடி வீண் செலவு? நலத்திட்டங்களுக்கு செலவு செய்திருக்கலாம் என கருத்து!