AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மயிலாடுதுறையில் கொடூரம்.. பணி முடிந்து வீடு திரும்பிய அரசு பேருந்து நடத்துனர் வெட்டி கொலை.. 4 தனிப்படைகள் அமைப்பு!

Mayiladuthurai Govt Bus Conductor Murder : மயிலாடுதுறை மாவட்டத்தில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த அரசு பேருந்து நடத்துனர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர் .

மயிலாடுதுறையில் கொடூரம்.. பணி முடிந்து வீடு திரும்பிய அரசு பேருந்து நடத்துனர் வெட்டி கொலை.. 4 தனிப்படைகள் அமைப்பு!
கொலை செய்யப்பட்ட அரசு பேருந்து நடத்துனர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 16:09 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், ஆனந்த தாண்டவம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். தமிழ்ச்செல்வன் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர், வழக்கமாக அதிகாலையில் 4:30 மணிக்கு பணிக்கு சென்று விட்டு இரவு சுமார் 10 மணி அளவில் வீடு திரும்புவது வழக்கமாகும். இந்த நிலையில், சம்பவத்தன்று பணிக்கு சென்ற தமிழ்ச்செல்வன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினர். அப்போது, ஆற்காடு ரயில்வே கேட் பகுதியில் சாலை ஓரம் வெட்டு காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அந்த பகுதி மக்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த நடத்துநர்

இதில், அவர் அணிந்திருந்த உடை அரசு பேருந்து ஓட்டுனரின் உடை என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து, அவரது உடைமைகளை சோதனை செய்வதில் அவரது அடையாள அட்டை உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர், அவரது சடலத்தை மீட்டு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இதனிடையே, கொலை செய்யப்பட்டு கிடந்த தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொலைகள்.. முதல்வர் மிக்சர் சாப்பிடுவதை நிறுத்துக.. கடும் நடவடிக்கை எடுத்திடுக.. உதயநிதி அதிரடி அட்டாக்!

கண்காணிப்பு கேமரா காட்சிகளில் போலீசார் ஆய்வு

அவர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலையில், அவரது சடலத்தை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து, அவர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதில், ஒரு கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

எஸ்.பி. தலைமையில் 4 தனிப்படைகள்

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அத்துடன், அரசு பேருந்து நடத்துனர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கொலையாளிகளை பிடிப்பதற்காக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா தலைமையில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகள் இனி வேற லெவல்.. மாதம் ரூ.5000 ஒதுக்கிய தமிழக அரசு.. எதற்காக தெரியுமா?

Follow Us