AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!

Vijayabhaskar Canvassed Votes For Two Leaves : தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு எம். ஆர். விஜயபாஸ்கர் கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.

தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!
வாக்கு சேகரிப்பில் சத்யபாமா, எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 16:41 PM IST

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் இன்று செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர், தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தெரிவித்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. முன்னதாக, அவர்கள் சத்தியபாமாவுடன் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் மத்தியில், எம். ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருடன் வேட்பாளர் சத்தியபாமாவும் உடன் இருந்தார்.

தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கா

இதில், பெண்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், உங்களுடைய பொன்னான வாக்குகளை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்திய பாமாவுக்கு அளியுங்கள். அவர் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்தில் என்று தவறுதலாக கூறிய அடுத்த கனமே, அதனை சுதாரித்துக் கொண்டு விசில் சின்னத்துக்கு தங்களது வாக்குகளை செலுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். விஜயபாஸ்கர், இரட்டை இலை என்று ஒலி வாங்கியில் பேசிய அடுத்த வினாடியே அருகில் இருந்த வேட்பாளர் சத்தியபாமா, தனது கைகளை தட்டியவாறு கலகலவென சிரித்தார்.

மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகள் இனி வேற லெவல்.. மாதம் ரூ.5000 ஒதுக்கிய தமிழக அரசு.. எதற்காக தெரியுமா?

தவெக வேட்பாளர் பிரசாரத்தில் நிலவிய சிரிப்பலை

இதே போல, வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு திரட்ட வந்திருந்த தமிழக வெற்றி கழகத்தினரும் ஒரு கணம் நகைச்சுவையுடன் சிரித்தனர். இதனால், அந்த பகுதியில் சிரிப்பலை நிலவியது. முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் தவெக வேட்பாளர் சத்தியபாமா ஆகிய இருவருமே அதிமுகவில் இருந்தவர்கள் ஆவர். இதில், சத்யபாமா இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு எம். எல். ஏ. வாக இருந்தார்.

அதிமுகவின் பழக்க தோஷத்தில் இரட்டை இலை வார்த்தை

இருவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவில் நெடுங்காலமாக பயணித்து வந்த இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டு பழகிய நிலையில், தற்போதும், அதே பழக்கத்தில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று எம். ஆர். விஜயபாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மயிலாடுதுறையில் கொடூரம்.. பணி முடிந்து வீடு திரும்பிய அரசு பேருந்து நடத்துனர் வெட்டி கொலை.. 4 தனிப்படைகள் அமைப்பு!

Follow Us