AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!

Dharapuram CM Vijay Wax Statue Campaign : தாராபுரம் தொகுதியில் தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் உருவச்சிலையுடன் வேட்பாளர் சத்யபாமா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் மத்தியில் ஆதரவு குறைவாக இருப்பதை ஈடு செய்வதற்கு இந்த டெக்னிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!
சிம் விஜய் உருவச்சிலையுடன் பிரசாரம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 17:22 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. அக்டோபர் 6- ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இல்லாத அளவுக்கு, தற்போது இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா என்பவர் தவெக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். தாராபுரத்தில் இவருக்கு செல்வாக்கு மற்றும் ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த தொகுதியை கைப்பற்றும் நோக்கிலும் தவெக தலைமை மீண்டும் இவரை இதே தொகுதியில் களமிறக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மாறாக தாராபுரம் தொகுதி நிலவரம் தலை கீழாக இருப்பதாக வெளியாகும் தகவல்கள் கூறுகின்றன.

தவெக தலைவர் ஜோசப் விஜய் சிலையுடன் பிரசாரம்

இதில், தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பொதுமக்கள் அவர்களை வழிமறித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தடை விதித்து வருகின்றனர். இதனால், அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை ஈடு செய்வதற்காக, சத்தியபாமா புதிய டெக்னிக் ஒன்றை கையில் எடுத்துள்ளார். அது என்னவெனில், தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் மெழுகு சிலையுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சரி செய்வதற்காக விஜயின் உருவ சிலையடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொலைகள்.. முதல்வர் மிக்சர் சாப்பிடுவதை நிறுத்துக.. கடும் நடவடிக்கை எடுத்திடுக.. உதயநிதி அதிரடி அட்டாக்!

தாராபுரம் மக்கள் சாந்தப்படுத்த விஜய் சிலையுடன் பரப்புரை

இந்த தொகுதியில் முதல்வர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தொகுதி மக்களை சாந்தப்படுத்தும் வகையில் இத்தகைய டெக்னிக்கை அவர் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. விஜயின் உருவ சிலையுடன் சத்தியபாமா வாக்கு சேகரிப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்ட போது அந்த பகுதி மக்கள் அவர்களிடம் அதிமுகவில் இருந்து விலகி எதற்காக தவெகவில் இணைந்தீர்கள். உங்களை நம்பி வாக்கு செலுத்திய தொகுதி மக்களின் நலன்களை பற்றி நீங்கள் எண்ணவில்லை.

தவெக வேட்பாளர் எடுத்த டெக்னிக்

எம்எல்ஏ இல்லாத தொகுதியாகவும், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாத தொகுதியாகவும் தாராபுரம் இருந்து வருகிறது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில், கடுப்பான தவெகவினர் விருப்பம் இருந்தால் விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.. இல்லையெனில் விட்டு விடுங்கள் என்று தெரிவித்திருந்தது அதிருப்தியை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் தான் தவெக வேட்பாளர் சத்தியபாமா முதல்வர் விஜயின் உருவச் சிலையுடன் இத்தகைய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!

Follow Us