AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. மாவட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு.. காவல்துறையில் பெரும் பரபரப்பு!

Case Registered Against Karaikal SP : புதுச்சேரி மாநிலத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. மாவட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு.. காவல்துறையில் பெரும் பரபரப்பு!
காரைக்கால் எஸ்.பி. சுப்ரமணியன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 21:34 PM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணியன். இவர், பெண் காவலர் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவலர் திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளிவந்த நிலையில், அந்த பெண் காவலர் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், விசாக குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, மேல்விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று அந்த பெண் காவலரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பெண் காவலர் பாலியல் புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.

காரைக்கால் எஸ்.பி. மீது விசாரணை இல்லை என மனு தாக்கல்

ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவையும் பொருள்படுத்தாமல் மேலதிக விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக பெண் காவலரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், விசாகா குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் புதுச்சேரி தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதை தொடர்ந்து, மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

மேலும் படிக்க: தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!

உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி காவல்துறை விளக்கம்

அப்போது, புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் பணிகளை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் காவல் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதை கேட்ட நீதிபதி காவல் கண்காணிப்பாளர் மீது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுமா என கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

காரைக்கால் எஸ்.பி. மீது வன்கொடுமை வழக்குப்பதிவு

இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மீது காரைக்கால் அனைத்து மகளிர் போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு விரைவில் குற்றப்பத்திரிக்கை மற்றும் விசாகா குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!

Follow Us