AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கையில் கத்தி-சீப்புடன் களமிறங்கிய தவெக எம்எல்ஏ.. தாராபுரத்தில் புதுவித கட்டிங் பிரசாரம்… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Mustafa MLA Canvass For Votes : தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சலூன் கடையில் முடி திருத்தம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது வைரலாகி வருகிறது .

கையில் கத்தி-சீப்புடன் களமிறங்கிய தவெக எம்எல்ஏ.. தாராபுரத்தில் புதுவித கட்டிங் பிரசாரம்… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
முடி வெட்டி வாக்கு கேட்ட முஸ்தபா எம்எல்ஏ.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Oct 2026 16:46 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தங்களது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து கட்சியின் எம்எல்ஏ முஸ்தபா சலூன் கடையில் ஒருவருக்கு முடி திருத்தம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தவெக வேட்பாளர் சத்தியபாமாவை வெற்றி பெற செய்வதற்காக அவரது கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தாராபுரத்தில் முகாமிட்டு தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா இன்று வியாழக்கிழமை தாராபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

தாராபுரத்தில் சலூன் கடையில் முடி வெட்டி வாக்கு சேகரிப்பு

அப்போது, அந்த பகுதியில் இருந்த ஒரு சலூன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை பார்த்த அவர் அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக கடையின் உள்ளே சென்றார். அப்போது, அங்கு முடி திருத்தம் செய்து கொண்டிருந்த நபரிடம் கத்தரிக்கோல் மற்றும் சீப் ஆகியவற்றை வாங்கிய முஸ்தபா எம்.எல்.ஏ. இளைஞர் ஒருவருக்கு தனது கைகளால் முடியை வெட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கடையின் உரிமையாளர், முடி திருத்தம் செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் தவெகவினர் அவரை வியந்து பார்த்தனர்.

மேலும் படிக்க: திருச்சி அருகே கோர விபத்து.. லாரி – கார் பயங்கர மோதல்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இருவர் மரணம்!

தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்

தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் சின்னமான விசிலுக்கு கண்டிப்பாக வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து முஸ்தபா எம்எல்ஏ உள்ளிட்ட தவெகவினர் புறப்பட்டு சென்றனர். முஸ்தபா எம்எல்ஏவின் இந்த எளிய மற்றும் புதுமையான பிரச்சாரம் தாராபுரம் பகுதி மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அரசியல் கட்சியின் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வது வழக்கமாகும்.

வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த தவெக எம்எல்ஏ

இதில், கட்சியின் வேட்பாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க செல்லும் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் டீ கடைகளில் டீ ஆற்றுவது, இஸ்திரி கடைகளில் துணிகளுக்கு இஸ்திரி போடுவது. பரோட்டா கடைகளில் பரோட்டா போடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் அவர்களது வேலைகளை செய்து வாக்கு சேகரிப்பது வழக்கமாகும். ஆனால், தாராபுரத்தில் தவெக எம்எல்ஏ முடி வெட்டி வாக்கு சேகரித்தது சற்று ஒரு வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னை வாசிகளுக்கு மெகா குட் நியூஸ்.. இனி பரனூர் டோல்கேட்டில் நிக்கவே வேண்டாம்… வந்துச்சு புது டெக்னாலஜி!

Follow Us