AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக கூட்டணிக்கு பாமக வந்தால்… விசிக வெளியேறிவிடும்.. கட்சியின் பொருளாளர் தடாலடி!

VCK Treasurer S. S. Balaji : தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி விடும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.

தவெக கூட்டணிக்கு பாமக வந்தால்… விசிக வெளியேறிவிடும்.. கட்சியின் பொருளாளர் தடாலடி!
தவெக-பாமக கூட்டணி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 01 Oct 2026 18:08 PM IST

தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் பாமக இணைய இருப்பதாகவும், அந்த கட்சியின் சட்டமன்ற தலைவர் சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி விடும் என்று அந்த கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது: அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது தவறாகும். இதற்கு விசிக கண்டனம் தெரிவித்த போதும், தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். குதிரை பேரம் என்பதில் விசிக மாறவில்லை. ஆனால், கூட்டணியில் இருப்பதால் ஆதரிக்க வேண்டிய சூழலில் விசிக உள்ளது.

தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக வெளியேறும்

தவெக, பாமக கூட்டணி தொடர்பாக தவெக தலைமை எந்தவித நகர்வும் இல்லை. பாமகவை எப்படி கொண்டு வரப் போகிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், விசிகவை, தவெக எப்படி பார்க்கிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும் பாமக மற்றும் பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது. ஒரு வேளை பாமக வேண்டும் என்று தவெக நினைத்தால் விசிக வேண்டாம் என்று அர்த்தம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலின் போது ராமதாஸ் அணி திமுக கூட்டணிக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் படிக்க: தேஜ கூட்டணியில் இருந்து விலகல்.. தவெக கூட்டணியில் பாமக இணைய முடிவு? அமைச்சரவையில் செளமியாவுக்கு இடம்!

தவறுக்கான விலையை தவெக கொடுக்க வேண்டும்

எனவே, பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தவெக இருக்கும் என விசிக நம்புகிறது. விசிக வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக உள்ளது. அனைத்தையும் சந்தேகப்பட முடியாது. தமிழக வெற்றி கழகம் செய்த பிழைக்கு அதற்கான விலையை கொடுத்து தான் ஆக வேண்டும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் உறுதியாக தவெக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்கள் வெற்றி பெற்றாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலைபாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.

தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு

தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு என்பது கட்சிகள் உருவாக்கியது கிடையாது. இந்த இரு தொகுதிகளில் அதிமுக பலமாக உள்ளது. அதேபோல, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கடும் போட்டியை தவெக கொடுத்திருந்தது. தமிழக வெற்றி கழகத்தில் யார் யார் தேர்தல் பணிகளை மேற்கொள்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அந்த கட்சிக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை எங்களையும் சேர்த்து அறிவித்தது தவறாகும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுகவினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவர்.. எனது அரசியல் அனுபவம் கூட அந்த அமைச்சரின் வயது கிடையாது.. பி.கே. சேகர்பாபு கொந்தளிப்பு!

Follow Us