AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திமுகவினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவர்.. எனது அரசியல் அனுபவம் கூட அந்த அமைச்சரின் வயது கிடையாது.. பி.கே. சேகர்பாபு கொந்தளிப்பு!

P.K. Sekar Babu Criticizes TVK Govt : எனது பொது வாழ்வின் அனுபவம் கூட அந்த அமைச்சரின் வயதாக இருக்காது என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

திமுகவினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவர்.. எனது அரசியல் அனுபவம் கூட அந்த அமைச்சரின் வயது கிடையாது.. பி.கே. சேகர்பாபு கொந்தளிப்பு!
பி.கே.சேகர்பாபு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Sep 2026 13:14 PM IST

திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை திட்டத்தில் முழுமையாக பணியும், ஊதியமும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமை தொகை, தகுதி இருந்தும் சிலருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் மதுராந்தகம் தொகுதி மக்கள் முன் வைத்துள்ளனர். திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோவிலின் கிழக்கு கோபுர பணிகளாக இருந்தாலும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில் பைரவர் சந்தராயர் மண்டப பணிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு மண்டபங்களில் திறப்பு விழாக்களாக இருந்தாலும் சரி அவற்றுக்கான அடித்தளத்தை அமைத்தது திராவிட மாடல் அரசு.

எனது அரசியல் அனுபவம் தான் அமைச்சர் வயது

இதற்கான அடித்தளத்தை அமைத்ததுடன், அதனை வளர்த்து நிறைவேற்றுவதற்கான நிலைக்கு திமுக அரசு கொண்டு வந்துள்ளது. எனக்கு அறிவு உள்ளதா என்று அமைச்சர் கேட்டுள்ளார். சுமார் 48 ஆண்டு காலம் நான் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். எனது பொது வாழ்வின் வயது கூட அவருக்கு கிடையாது. இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விட்டுள்ளார்.

மேலும் படிக்க: அன்பில் மகேஸ் கூட்டாளி இடங்களில் சிசிபி திடீர் சோதனை.. 44 ஆவணங்கள்- மடிக்கணினி பறிமுதல்.. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

பல்வேறு காட்டாறுகளை பார்த்தது திமுக

நாம் ஒன்றும் யுத்த களத்தில் நிற்கவில்லை. ஜனநாயக ரீதியாக அரசியல் செய்து வருகிறோம். சட்டப்பேரவையிலும், வெளியேயும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதையும் தூண்டிவிடும் வேலையை ஆதவ் அர்ஜுனா செய்து வருகிறார். நீ அந்த கேட்டை தாண்ட மாட்டாய்… இந்த கேட்டை தாண்ட மாட்டாய் என்று மிரட்டல் விடுகிறார். திராவிட முன்னேற்ற கழகம் என்பது பல்வேறு காட்டாறுகளையும், நெருப்பு ஆறுகளையும் தாண்டி வந்த இயக்கம் ஆகும்.

திமுகவினர் சினம் கொண்ட சிங்கமாக மாறுவர்

தமிழக அரசியல் களத்தில் 78 ஆண்டுகள் பயணித்து வரும் ஒரு இயக்கத்தை மிரட்டும் பாணியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஈடுபடுவது அவரது மடமையை காட்டுகிறது. எப்போது எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனை வருகிறதோ. அப்போதெல்லாம் இந்த இயக்கம் இப்படி சிறுமைப்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த இயக்கமும், தொண்டர்களும் சினம் கொண்ட சிங்கமாக மாறுவார்கள் என்று ஆக்ரோசமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: தேஜ கூட்டணியில் இருந்து விலகல்.. தவெக கூட்டணியில் பாமக இணைய முடிவு? அமைச்சரவையில் செளமியாவுக்கு இடம்!

Follow Us