Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Thirumavalavan

Thirumavalavan

திருமாவளவன்
திருமாவளவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், சாதி ஒழிப்பு இயக்கத் தலைவரும் ஆவார். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூரில் பிறந்த அவர் தற்போது சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் , “தலித்”, “நான் தூக்கிலிடப்பட வேண்டும்” போன்ற பல தமிழ்நூல்களை எழுதி, சமூக மாற்றத்துக்கு வாசகர் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் மறைந்த மாவீரன் மலைச்சாமி நடத்தி வந்த தலித் பேந்தர்ஸ் என்ற அமைப்பை, அவரது மறைவுக்குப் பின் தலைமை பொறுப்பேற்று 1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். சமூக நீதி, சம உரிமைகள், மதசார்பற்ற அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்து செயல்பட்டு வருகிறார். 2009ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இவர் தற்போது INDIA கூட்டணியில் செயற்படுகிறார். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.

 

Read More

விஜய் அரசியல் வருகையால் ஆட்சி மாற்றமா..? திருமாவளவன் விளக்கம்!

சென்னை விமான நிலையத்தில் இன்று அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” திமுக அரசு மீது தவெக விஜய் வைக்கும் விமர்சனங்களுக்கு திமுக உரிய நேரத்தில் பதிலளிக்கும். விஜய் அரசியல் வருகையால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள்” என்றார்.

தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..

VCK Leader Thirumavalavan: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்ககூடிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட சூழல் உருவாகலாம்; அதாவது வாக்கு திருட்டு முயற்சிகள் நடைபெறலாம்” என தெரிவித்துள்ளார்.

Tirunelveli Honour Killing: கவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. உதவி செய்த திருமாவளவன்..!

VCK Thirumavalavan: திருநெல்வேலியில் ஆணவக் கொலையில் பலியான கவின் செல்வகணேஷின் குடும்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். விசிக தலைவர் திருமாவளவனும் சந்திப்பில் கலந்து கொண்டார். கவின் குடும்பத்தின் பாதுகாப்பு, குற்றவாளிகளின் கைது மற்றும் அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

திமுக கூட்டணிக்குள் சிக்கி தவிக்கிறார் திருமாவளவன்.. நயினார் நாகேந்திரன் பளீச் பதில்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமாவளவன் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், பற்றும் உள்ளது. திமுக கூட்டணிக்குள் திருமாவளவன் சிக்கி தவிக்கிறார். திமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று திருமாவளவனின் மன வருத்தத்தின் வெளிப்பாடு இது” என்று தெரிவித்தார்.

பிறந்தநாளில் திருமாவளவன் வீட்டில் நடந்த சோகம்.. சமூக வலைதளத்தில் உருக்கம்!

VCK Leader Thol Thirumavalavan : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அவரது சிற்றன்னை மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து திருமாளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அம்மாவுக்கு எனது வீரவணக்கம் எனவும் பதிவிட்டுள்ளார். அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திமுக கூட்டணி உடைக்க முனைப்புடன் உள்ளனர்.. இது அற்ப தனமான ஒன்று – திருமாவளவன்..

Thirumavalavan: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு நாள் ஒன்று முதல் விசிக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க சிலர் முனைப்புடன் செயல்பட்டு வருவது அற்ப தனமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!

Tamilisai Soundararajan : தூய்மை பணியாளர்கள் மீது அக்கறை இருந்தால், திமுக அரசு கருணையொடு நடந்து கொள்ளவில்லை என்றால் கூட்டணியில் வெளியேறுவோம் என்று கூற முடியும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் முதல்வரை விட தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து விசிகவினர் பேசக்கூடாது – நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்..

VCK Leader Thirumavalavan: ஆணவப்படுகொலைக்கு எதிராக தனி சட்ட இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் யாரும் அதிமுக முன்னாள் தலைவர்கள் அல்லது எடப்பாடி பழனிசாமி குறித்து பேசக்கூடாது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan: எம்ஜிஆர், ஜெயலிதா குறித்து அவதூறாக பேசினேனா..? திருமாவளவன் விளக்கம்..!

MGR, Jayalalithaa Clarification: திருமாவளவன், கருணாநிதி நினைவுச்சின்ன நிகழ்வில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். தமிழக அரசியலின் வரலாற்றுப் பின்னணியை விளக்கவே அவர் பேசியதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மீது மரியாதை உடையவர் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு

CM MK Stalin : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர்.  ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற கோரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். 

Thirumavalavan: திமுகவிடம் கூட்டணி கட்சிகள் அடிமையா..? எழுந்த விமர்சனம்.. திருமாவளவன் பதில்..!

Thirumavalavan on DMK Alliance: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ, சிபிஎம் மாநிலச் செயலாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரிக்கை வைத்தனர். எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த நிலையில், திருமாவளவன் மற்றும் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்.. பின்னணி என்ன?

Tirunelveli Honour Killing : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இந்த நிலையில், ஆவணக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கூட்டணி கட்சித் தவைர்கள் மனு அளித்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக நாதக, விசிக.. வேறு லிஸ்டில் தவெக.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Tamil Nadu Election Commission : நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் மாநில தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. ஏற்கனவே, இந்த மூன்று கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்று அறிவிப்பை வெளியிட்டது.

1967,1977 போல 2026 சட்டப்பேரவை தேர்தலா? விஜயின் கருத்துக்கு திருமாவளவன் பதில்!

Thirumavalavan Replies To TVK Chief Vijay : 1967, 1977ஆம் ஆண்டு தேர்தலை போல, 2026 சட்டப்பேரவை தேர்தல் இருக்கும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியதற்கு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 1967, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலை போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு  ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். 

”கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கவே எடப்பாடி அழைக்கிறார், வேறு எந்த காரணமும் இல்லை” – திருமாவளவன் திட்டவட்டம்..

Thirumavalavan: எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு என்பது கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான முயற்சி தவிர அதில் வேறு எந்த உண்மையையும் இல்லை. நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி மதசார்பற்ற கூட்டணி அதனை வலுப்பெற செய்வதும் வெற்றி பெற செய்வதும் கூட்டணியில் உள்ள அனைவரின் கடமை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.