உத்தரப் பிரதேச மாநிலம், லகீம்பூர் கேரி மாவட்டத்தில் அமைந்துள்ள துத்வா புலிகள் காப்பகத்திற்கு, சஃபாரி பயணத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் திகைப்பூட்டும் காட்சியை நேரில் பார்த்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சஃபாரி பயணத்தின் போது, ஒரு புலி தனது வாயில் பெரிய மலைப்பாம்பை பிடித்துக்கொண்டு செல்லும் அபூர்வ காட்சி சுற்றுலாப் பயணிகளை பதற வைத்தது. சுமார் ஏழு அடி நீளமான மலைப்பாம்பை, புலியின் கூர்மையான பற்களிலிருந்து தப்பிக்க முயன்று திணறியது.