தவெகவுடன் கூட்டணி… அதிமுக பரப்பும் வதந்தி.. போட்டு உடைத்த திருமாவளவன்
Thirumavalavan On AIADMK Alliance : அதிமுக தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி தான் என்றும் அப்படி கூட்டணி வைத்தால் பாஜகவை கழட்சி விட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை, அக்டோபர் 11 : தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பு வதந்தி என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவெகவை ஏற்றுக் கொண்டு பாஜகடிவ கழற்றிவிட்ட தயாராகிவிட்டதா அதிமுக எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. இதற்கிடையில் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு ஓராண்டு முன்னே அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைத்தாலும் அரசியல் களத்தில் புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. பாஜகவும் மறைமுகமாக அந்த பணியை செய்து வருகிறது. இது தொடர்பாக விஜயிடம் இரு தலைவர்களும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நடந்த கரூர் சம்பவத்திற்கு பிறகு, கூட்டணி கணக்குகள் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு தவெகவுக்கு அதிமுக சப்போர்ட் செய்து வருகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையில் தவெக கொடி இடம்பெற்று வருகிறது. சமீபத்தில் கூட , தவெக கொடியை பார்த்து கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டதாக உற்சாகமாக கூறினார். இதனால், அதிமுக தவெக கூட்டணி அமைக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேருவது கேள்விக்குறிதான். ஏனென்றால், ஆரம்பத்தில் இருந்தே விஜய் தலைமையில் தான் கூட்டணி என்றும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் தவெக உறுதியாக இருக்கிறது.
Also Read : விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? – திருமாவளவன் கேள்வி!




”தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி”
அதே நேரத்தில் கொள்கை எதிரி பாஜக என்று கூறி வரும் விஜய், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவில் விஜய் இணைவது சந்தேகம் தான் என்று அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், தவெக அதிமுக கூட்டணி அமையும் என அதிமுகவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அது தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பு வதந்தி தான். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில், கொள்கை ரீதியாக தவெகவுக்கு எதிரியாக இருக்கும் பாஜக கூட்டணிக்கு எவ்வாறு அந்தக் கட்சி செல்லும்? அப்படியென்றால், பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடுமா என்பது தெரியவில்லை. அவ்வாறு கழட்டிவிட்டால் அதிமுகவின் கூட்டணியின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகும்” என்று கூறினார்.
Also Read : ‘சதி வலையில் சிக்கிய விஜய்’ கரூர் சம்பவம் குறித்து திருமாவளவன் விமர்சனம்!
தொடர்ந்து, அதிமுக தவெக கூட்டணி திமுக கூட்டணியை பாதிக்குமா என்ற கேள்விக்கு யூகத்திற்கு பதில் கூற முடியாது என்று தெரிவித்தார். மேலும், விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தவெக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு தனக்கு பாதுகாப்ப வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியுள்ளார். விஜய் மக்கள் செல்வாக்கு மிக்கவர். அவர் செல்லும்போது பாதுகாப்பு தேவைதான். அவர் கோரிக்கை வைத்ததில் எந்த தவறும் இல்லை” என்றார்.