
Assembly Elections
மாநில சட்டமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 16 முறை சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இவற்றில் சில முறை ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், பக்தவச்சலம், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுவரை முதலமைச்சர் பதவியை வகித்தவர்கள்.இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கட்சிகள் சார்பிலும் தேர்தல் தொடர்பாக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாம் இந்த தொகுப்பில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களைக் காணலாம்
விஜயால் விஜயகாந்த் ஆக முடியாது.. கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே – பிரேமலதா விஜயகாந்த்
Premalatha Vijayakanth: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயால் கேப்டன் ஆக முடியாது என பேசியுள்ளார். மேலும் தேமுதிக நிகர் தேமுதிக மட்டுமே, யாராலும் தேமுதிகவின் வாக்குகளை பறிக்க முடியாது என்றும் அதனை கட்சித் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 24, 2025
- 17:21 pm
த.வெ.க கட்சிக்கு எழுந்த புதிய சிக்கல்.. ஆட்டோ சின்னம் இல்லையாம்.. புதிய சின்னம் தேர்வு செய்ய முனைப்பு..
TVK Symbol In Election: தமிழக வெற்றிக் கழகம் அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், அதில் எந்த சின்னம் பெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் தவெக தரப்பில் விசில் சின்னம் பெற கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 23, 2025
- 21:10 pm
தென்மாவட்டம் குறி.. 4ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. திட்டம் என்ன?
Edappadi Palanisamy Campaign : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை 2025 செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ளார். மதுரையில் இருந்து தொடங்கும் நிலையில், 2025 செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Umabarkavi K
- Updated on: Aug 23, 2025
- 12:33 pm
”விஜயின் பலம் என்ன? 50 வருஷமா எங்கே போனார்? ” – அண்ணாமலை சரமாரி கேள்வி..
Annamalai On Vijay: நெல்லையில் நடைபெற்ற பூத் கமிட்டிகள் மாநாட்டில் பேசிய முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரை பொது வெளியில் அங்கிள் என கூப்பிடுவது சரியல்ல. இப்போது பேசும் விஜய் கடந்த 50 ஆண்டுகளாக எங்கே இருந்தார் என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 22, 2025
- 20:51 pm
திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் – நெல்லை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு..
Amit Shah On DMK: நெல்லை மாவட்டத்தில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். திமுகவின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 22, 2025
- 19:43 pm
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது – அண்ணாமலை..
Annamalai On Edappadi Palaniswami: நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 22, 2025 தேதியான இன்று பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜகவின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 22, 2025
- 18:35 pm
”விஜய் எங்களுக்கு தம்பி, இந்த உறவு இப்போது உருவானது அல்ல” – பிரேமலதா விஜயகாந்த்..
Premalatha Vijayakanth On Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தலைவர் விஜய் கேப்டன் விஜயகாந்த் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த, “ விஜய் எங்களுக்கு தம்பி, இந்த உறவு பலகாலமாக இருந்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 22, 2025
- 17:06 pm
நெல்லை வரும் அமித் ஷா.. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு.. பாஜகவின் பிளான் இதுதான்!
Amit Shah Tamil Nadu Visit : திருநெல்வேலியில் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (2025 ஆகஸ்ட் 22) மதியம் நெல்லைக்கு வருகை தருகிறார்.
- Umabarkavi K
- Updated on: Aug 22, 2025
- 10:27 am
த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு.. நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்..
TVK Conference Resolution: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெற்றது. அதில், பரந்தூர் விமான நிலையம், ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மீனவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 21, 2025
- 20:43 pm
எல்லா சினிமாக்காரனும் முட்டாள் அல்ல.. த.வெ.க மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி கதை..
TVK Conference Vijay Speech: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், எல்லா அரசியல்வாதியும் புத்திசாலி இல்லை என்றும், எல்லா சினிமாக்காரனும் முட்டள்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு தலைவர் உணமையாக இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 21, 2025
- 19:20 pm
234 தொகுதிகளிலும் விஜய்தான் போட்டி – த.வெ.க மாநாட்டில் தலைவர் விஜய் வைத்த டிவிஸ்ட்..
TVK Madurai Conference Vijay Speech: மதுரையில் நடந்த த.வெ.க மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசுகையில், 234 தொகுதிகளிலும் விஜய் தான் போட்டி என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களுக்காக சேவை செய்வதே எனது பணி என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 21, 2025
- 18:34 pm
கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு – த.வெ.க தலைவர் விஜய் உறுதி..
TVK Conference Vijay Speech: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், ” 2026 நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் அதனை சொல்லும் மாநாடு தான் இந்த இரண்டாவது மாநாடு. மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு ” என பேசியுள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 21, 2025
- 17:17 pm
த.வெ.க கொடியை தலையில் கட்டி ரேம்ப் வாக்கில் விஜய்.. ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் கூட்டம்..
TVK Conference Madurai: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைவர் விஜய் கட்சிக் கொடியை தலையில் கட்டியும், தோளில் அணிந்தும் விழா மேடையில் இருந்து ரேம்ப் வாக் மூலம் மக்களை சந்தித்து வருகிறார்,
- Aarthi Govindaraman
- Updated on: Aug 21, 2025
- 16:14 pm
சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் தலைவர் விஜய்.. திடலில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்..
TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் மாநாட்டு மேடைக்கு தலைவர் விஜய் வருகை தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டுத் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Aug 21, 2025
- 15:37 pm
நாளை தமிழகம் வரும் அமித் ஷா.. நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு.. பாஜக பிளான் என்ன?
Amit Shah Tamil Nadu Visit : மத்திய உள்துறை அமித் ஷா 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதி (நாளை) தமிழகத்திற்கு வருகை தருகிறார். திருநெல்வேலியில் நாளை நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். மேலும், தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
- Umabarkavi K
- Updated on: Aug 21, 2025
- 08:38 am