AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பர்பிள் கேப் பந்தயம்.. ஐபிஎல்லில் வெல்லாத 5 ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள்!

IPL Purple Cap: ஐபிஎல்ன் 18 ஆண்டு கால வரலாற்றில், மொத்தம் 15 பந்துவீச்சாளர்கள் பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர். ஒரு சீசன் முழுவதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், மற்றும் டுவைன் பிராவோ ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இரண்டு முறை பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர்.

IPL 2026: பர்பிள் கேப் பந்தயம்.. ஐபிஎல்லில் வெல்லாத 5 ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள்!
பர்பிள் கேப் வெல்லாத 5 பந்துவீச்சாளர்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Mar 2026 20:13 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2026) பிரட் லீ, ஷோயப் அக்தர், லசித் மலிங்கா, மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஐபிஎல்-இன் 18 ஆண்டு கால வரலாற்றில், மொத்தம் 15 பந்துவீச்சாளர்கள் பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர். ஒரு சீசன் முழுவதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar), ஹர்ஷல் படேல், மற்றும் டுவைன் பிராவோ ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இரண்டு முறை பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளனர். இருப்பினும், இன்னும் பல ஜாம்பவான் பந்துவீச்சாளர்களாலும் இந்த சாதனையை படைக்கவில்லை.

ALSO READ: ஃபின் ஆலன் முதல் முசரபானி வரை… ஐபிஎல் 2026-ல் அறிமுகமாக வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள்!

ஜஸ்பிரித் பும்ரா:

உலக கிரிக்கெட்டில் தற்போது அபாயகரமான பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். சமீபத்தில், இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும் பும்ரா முக்கிய காரணமாக இருந்தாது. சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி, ஐபிஎல்லிலும் புதிய பந்தைக் கையாள்வது, மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவது, டெத் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது என எதுவாக இருந்தாலும், பும்ரா எப்போதும் கேப்டனின் கண்களுக்கு கடவுளாக தெரிவார். பும்ரா தனது ஐபிஎல் வாழ்க்கையில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பும்ரா பர்ப்பிள் கேப்பை வென்றதில்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிசந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் தனது சுழற்பந்துவீச்சின் மூலம் கடினமான சூழ்நிலைகளில் இருந்து அணிகளைக் காப்பாற்றும் அவரது திறன் ஒரு தனிச்சிறப்பாகவே இருந்து வந்தது. ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல்-லில் 16 சீசன்களில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், ரவிசந்திரன் அஸ்வின் இதுவரை பர்ப்பிள் கேப்பை வென்றதில்லை.

சுனில் நரைன்:

கடந்த 14 ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வரும் சுனில் நரைன், 192 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். 189 போட்டிகளில் விளையாடிய போதிலும், அவரது எகானமி ரேட் 8-க்கும் குறைவாகவே இருந்தபோதும், அவரால் பர்ப்பிள் கேப்பை வெல்ல முடியவில்லை.

பியூஷ் சாவ்லா:

ஐபிஎல் 2025 முடிவடைந்த பிறகு பியூஷ் சாவ்லா இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து ஓய்வு பெற்றார்.  ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை சாவ்லா 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2023ம் ஆண்டு மட்டுமே அதிகபட்சமாக 20 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஒரே சீசனாகும், ஆனால் அவரது நிலைத்தன்மை ஈடு இணையற்றதாகவே இருந்தாலும், பியூஷ் சாவ்லாவால் பர்ப்பிள் கேப் வெல்ல முடியவில்லை.

ALSO READ: ஒரு ஐபிஎல் அணிக்கு இதுவரை 17 கேப்டன்கள்.. 10 அணியும் இதுவரை எத்தனை கேப்டன்களை நியமித்துள்ளது?

ரஷித் கான்:

2017 முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வரும் ரஷித்
கான் 158 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரஷித் கான் கடந்த 3 சீசன்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 27 விக்கெட்டுகளை எடுத்தார். அவராலும் இன்னும் பர்ப்பிள் கேப்பை வெல்ல முடியவில்லை.

Follow Us