AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

MS Dhoni: ஜெர்சியின் 7ம் நம்பரை விட்டுக்கொடுக்கும் தோனி..? வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு! என்ன காரணம்?

MS Dhoni Jersey Number: எம்.எஸ்.தோனி அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க மாட்டார். அதனால், அவர் பதிவிடும்போதெல்லாம் ஒரு விவாதம் ஏற்படும். 2026 மார்ச் 17ம் தேதியான இன்று மகேந்திர சிங் தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

MS Dhoni: ஜெர்சியின் 7ம் நம்பரை விட்டுக்கொடுக்கும் தோனி..? வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு! என்ன காரணம்?
எம்.எஸ்.தோனிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 20 Mar 2026 13:26 PM IST

இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி என்றதும், முதல் ஞாபகத்திற்கு வருவது ஜெர்சி எண் 7 நம்பர்தான். ஏனென்றால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனி கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த நாள் முதல், அவர் அணியும் 7ம் நம்பர் ஜெர்சியை பார்த்தே பழகி விட்டார். எனவே, 7 ஆம் எண் ஜெர்சி அவரது அடையாளமாகிவிட்டது. சமீபத்தில், 2026 டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்படி கிரிக்கெட் உலகின் 7 என்ற எண்ணை கொண்ட எதை பார்த்தாலும், தோனி ஃபார் தி ரீசென் என்ற ரசிகர்கள் சொல்லுவார்கள். இருந்தபோதிலும், எம்.எஸ். தோனி (MS Dhoni) நம்பர் 7லிருந்து 8ம் நம்பரை தேர்ந்தெடுக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

ALSO READ: அவர் என் இடத்தில் இருந்தால் தான் தெரியும் – தோனியின் கருத்துக்கு கம்பீர் பதில்

இதற்கு காரணம் என்ன..?


எம்.எஸ்.தோனி அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க மாட்டார். அதனால், அவர் பதிவிடும்போதெல்லாம் ஒரு விவாதம் ஏற்படும். 2026 மார்ச் 17ம் தேதியான இன்று எம்.எஸ்.தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியது. தோனி பதிவிட்ட காணொளி ஒன்றில், தோனியின் பெயர் எழுதப்பட்டிருந்த 7ம் எண் ஜெர்சி ஹேங்கரிலிருந்து அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக 8ம் எண் ஜெர்சி மாட்டப்பட்டிருப்பது போல் இருந்தது.

தொடர்ந்து அந்த வீடியோவின் தலைப்பின் கீழ், “சில எண்கள் எப்போதும் நம்முடன் இருக்கும். அவற்றில் எண் 7ம் ஒன்று. ஆனால், இன்று நான் எண் 8ஐ தேர்ந்தெடுத்தேன். ஏன் என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள்” என்று எழுதியிருந்தார். தற்போது தோனியின் பதிவின் சரியான அர்த்தம் என்னவென்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ளனர். சிலர் இதை ரவீந்திர ஜடேஜாவுடன் தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர். ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பு, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து பரிமாற்றம் செய்தது. அதன்படி, ஜடேஜாவின் ஜெர்சி எண் 8 ஆகும். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய அணியில் விளையாடியபோது ஜடேஜா இந்த எண்ணைதான் பயன்படுத்தினார். எனவே, ஜடேஜா வெளியேறிய பிறகு, தோனி அவரின் நினைவாக 8ம் எண்ணை தேர்ந்தெடுத்தார் என்று சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசன் இந்த 4 வீரர்களுக்கு கடைசியா? கடந்த சீசனில் செயல்திறன் எப்படி?

தோனி இதற்கு முன்பும் இதுபோன்ற விளம்பர பதிவுகளை வெளியிட்டுள்ளதால், அவர் இந்த பதிவை விளம்பரத்திற்காக வெளியிட்டிருக்கலாம் என்று சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Follow Us