AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே அணியின் பலம் என்ன?

IPL 2026 CSK Squad Analysis: கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணியின் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து, டாப் ஆர்டரில் பலம் சேர்க்கிறார். இதற்கிடையில், எம்.எஸ். தோனி மீண்டும் ஃபினிஷராக களமிறங்கி எதிரணிக்கு பயம் காட்டுவார். மிடில் ஆர்டரில் ஷிவம் துபே பவர்-ஹிட்டராகவும், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரூவிஸ், உர்வில் படேல் ஆகியோர் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டரில் பேட்டிங்கில் தீயாய் வேலை செய்வார்கள்.

IPL 2026: கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே அணியின் பலம் என்ன?
சிஎஸ்கே இளம் வீரர்கள்Image Source: CSK/Instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Mar 2026 17:10 PM IST

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி ஐபிஎல் 2026ல் 6வது முறையாக சாம்பிய பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது. வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனுடன், அதற்கு அடுத்த நாள் அதாவது 2026 மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. ஐபிஎல் 2026க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல மாற்றங்களை செய்துள்ளது. இதற்கு காரணம், கடந்த ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. சென்னை அணி எப்போதும் எப்போதும் மூத்த மற்றும் அனுபவ வீரர்களை நம்பியிருப்பதில் பெயர் பெற்றிருந்தாலும், இந்த முறை பல இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசன் இந்த 4 வீரர்களுக்கு கடைசியா? கடந்த சீசனில் செயல்திறன் எப்படி?

சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர்:

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணியின் முதுகெலும்பாகத் தொடர்ந்து இருந்து, டாப் ஆர்டரில் பலம் சேர்க்கிறார். இதற்கிடையில், எம்.எஸ். தோனி மீண்டும் ஃபினிஷராக களமிறங்கி எதிரணிக்கு பயம் காட்டுவார். மிடில் ஆர்டரில் ஷிவம் துபே பவர்-ஹிட்டராகவும், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரூவிஸ், உர்வில் படேல் ஆகியோர் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டரில் பேட்டிங்கில் தீயாய் வேலை செய்வார்கள். இதுமட்டுமின்றி, சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்தது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது, ஷ்ரேயாஸ் கோபால், அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, ஜேமி ஓவர்டன் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சஞ்சு சாம்சன்:

நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு வர்த்தகம் மூலம் மாற்றப்பட்டார். அதன்படி, சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக தொடக்க வீரராகவோ அல்லது மிடில் ஆர்டர் வரிசையில் அதிரடி பேட்டிங்கை வழங்க முடியும். ரவீந்திர ஜடேஜா பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஆனால், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

ALSO READ: எம்.எஸ்.தோனியின் ஓய்வு உறுதி..? முன்னாள் சிஎஸ்கே வீரர் கொடுத்த தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ஆயுஷ் மத்ரே, கார்த்திக் ஷர்மா, சர்ஃபராஸ் கான், உர்வில் படேல், அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, நூர் அகமது, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், பிரஷாந்த் வீர், ஜாக், மட், ஷார்ட் வீர், ஜாக், மாட் சௌத்ரி, நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், குர்ஜபனீத் சிங், அகேல் ஹொசைன், மாட் ஹென்றி, ராகுல் சாஹர்.

Follow Us