AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) என்பது தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஃபிரான்சைஸ் கிரிக்கெட் அணியாகும். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான இது, ஐந்து முறை (2010, 2011, 2018, 2021 மற்றும் 2023) பட்டத்தை வென்றுள்ளது. கடந்த 2008-ல் நிறுவப்பட்ட இந்த அணி, தனது சொந்தப் போட்டிகளை சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் (சேப்பாக்கம்) விளையாடுகிறது. இது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி 2008 முதல் 2023 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தினார். 2024 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2013 ஐபிஎல் சூதாட்ட ஊழல் வழக்கில் சிஎஸ்கே உரிமையாளர்கள் சிலர் சிக்கி கொண்டதால், 2015-ல் அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 2018-ல் மீண்டும் களமிறங்கிய சென்னை பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Read More

IPL 2026: 2008 முதல் 2026 வரை.. ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் விவரம்!

IPL Winners List: ஐபிஎல் லீக் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் மறைந்த ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்டத்தை வென்றது. இதற்கு முன்பு, 2021 வரை இந்த லீக் எட்டு அணிகளுக்கு இடையே விளையாடப்பட்டது. ஆனால் கடந்த மூன்று சீசன்களாக 10 அணிகள் பங்கேற்று வருகின்றன. அதற்கு முன்பு, 2010-லும் 10 அணிகள் பங்கேற்றன.

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் சொதப்பல்.. அடுத்த சீசனில் இந்த 4 அணிகளின் கேப்டன்கள் வெளியேற்றமா?

IPL 2027 Captains Change: ரிஷப் பண்டை தொடர்ந்து , ஹர்திக் பாண்ட்யாவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, இத்தகைய முடிவு எடுக்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யா ஏற்கனவே இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2026: சிஎஸ்கே அணிக்கு வரும் ஹர்திக் பாண்ட்யா..? முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன ரகசியம்!

Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவுடன் பிரிந்து செல்ல ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. ஹர்திக்கின் தலைமையில் அணியின் செயல்பாடு மோசமடைந்ததாலும், அணிக்குள் தகராறுகள் வெளிப்பட்டதாலும், மும்பை அணி நிர்வாகம் தற்போது புதிய மாற்று வழிகளைப் பரிசீலித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது வீரர்களின் பிம்பத்தை மேம்படுத்துவதில் பெயர் பெற்ற ஒரு அணியாகும்.

IPL 2026: குவாலிஃபையர் 1ல் வெற்றி பெற்ற அணியே அதிக முறை சாம்பியன்.. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பதிவான விவரம்!

IPL Playoffs Records: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை, 18 சீசன்களில் 8 வெவ்வேறு அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதனை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஹேப்பி நியூஸ்.. 2027 ஐபிஎல் தொடரில் தோனி.. நம்பிக்கை வார்த்தைகள் சொன்ன நிர்வாகம்!

MS Dhoni IPL 2027 : காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்காத எம்.எஸ். தோனி, 2027 தொடரில் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இது குறித்து பேசியுள்ளார். அவர் சொன்ன விஷயங்களை பார்க்கலாம்

IPL 2026: சிஎஸ்கே அணிக்காக வழிகாட்டியாக வரும் தோனி.. அணி நிர்வாகம் சூசக தகவல்!

MS Dhoni Mentor For CSK: தோனி நடப்பு ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் அணியுடன் களத்தில் இணையவில்லை என்றாலும், சென்னையின் கடைசி உள்ளூர் போட்டிக்காக எம்.எஸ்.தோனி அணியுடன் மைதானத்திற்கு வந்தார். அந்த போட்டியில் தோனி விளையாடவில்லை என்றாலும், அணியின் கடைசி உள்ளூர் போட்டியில் ரசிகர்கள் முன் தோன்றி டி சர்ட் மற்றும் பந்துகளை வழங்கினார்.

IPL 2026: சிஎஸ்கே பயிற்சிக்குழுவில் தலையிட்ட தோனி.. வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு!

MS Dhoni: சிஎஸ்கேவின் பயணம் ஐபிஎல் 2026 சீசனில் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை, சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சிஎஸ்கே-வின் பயிற்சியாளராக ஆக விரும்பும் ஒருவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் தோனி அணியில் இருக்கும் வரை தன்னால் அந்த அணியில் சேர முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

IPL 2026: ஐபிஎல் 2027 சீசனில் தோனி விளையாடுவாரா..? ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த ஷாக் பதில்!

MS Dhoni: கால் தசைக் காயம் காரணமாக எம்.எஸ். தோனி, ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2026 சீசன் தொடங்கிய நாளான கடந்த 2026 மார்ச் 28ம் தேதி கால் தசைக் காயம் காரணமாக தோனி 2 வாரங்களுக்கு விளையாடாமல் இருக்கலாம் என்று சென்னை அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

IPL 2026: ஒரு போட்டியில் கூட இல்லாத ’தல’ தரிசனம்.. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை!

Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு சற்று முன்பு, சீசனுக்கு முந்தைய பயிற்சி முகாமின் போது தோனிக்கு கெண்டைக்கால் காயம் ஏற்பட்டது. தோனி 2 வாரங்களில் அணிக்குத் திரும்புவார் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் முதலில் நம்பியது. இருப்பினும், காயம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டது. தோனி மீண்டும் அணிக்குத் திரும்ப முயற்சித்தார். ஆனால் அது காயத்தை மேலும் மோசமாக்கியது.

IPL 2026: கொடுத்த வாய்ப்பு வீண்.. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படும் 4 வீரர்கள்..!

IPL 2027 Chennai Super Kings: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி பின்னர் ஏமாற்றத்தையே கொடுத்து, தொடர்ச்சியாக 3 முறை பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. அடுத்த சீசனில் நடைபெறவுள்ள மெகா ஏலத்தைக் கருத்தில் கொண்டு, சிஎஸ்கே தனது அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யக்கூடும்.

IPL 2026: மீண்டும் ருதுராஜ் அதே தவறு.. கடும் நடவடிக்கை எடுத்த பிசிசிஐ!

CSK Fined: ஐபிஎல் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடைபெற்ற டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரின் 66வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட்டை பராமரித்ததால், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெளியேறியது சிஎஸ்கே.. பிளே ஆஃப் அணிகள் என்னென்ன? ஐபிஎல் புள்ளி பட்டியல்!

IPL Points Table 2026 : குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், அவர்கள் முதல் இரண்டு இடங்களில் தங்களது இடத்தை உறுதி செய்தனர். இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த சீசனின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

IPL 2026: வெளியேறிய சென்னை.. 2ம் இடத்தில் குஜராத்.. கெத்தாக வெற்றி பெற்ற சுப்மன் படை!

GT vs CSK Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

IPL 2026: குஜராத் எதிராக சிஎஸ்கே தோற்றால் என்ன நடக்கும்..? பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா?

CSK Playoffs: சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸை ஒரு பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்து 2 புள்ளிகளைப் பெற்று, தங்களது ரன் ரேட்டையும் மேம்படுத்த வேண்டும். எனவே, அடுத்து என்ன நடக்கும்? இது அவர்களை பிளேஆஃப்களுக்குத் தகுதிபெற உதவுமா என்று கேட்டாலும் சந்தேகம்தான். குஜராத்திற்கு எதிரான ஒரு பெரிய வெற்றிக்குப் பிறகும், அவர்கள் மற்ற அணிகளைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

IPL 2026: அவசரமாக ராஞ்சி திரும்பிய தோனி.. ஐபிஎல்லில் இருந்து விரைவில் ஓய்வா?

MS Dhoni Return Ranchi: கடந்த 2026 மே 18ம் தேதி சேப்பாக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 13வது போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ். தோனி அந்தப் போட்டிக்காக அணியுடன் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு சென்றார். ஆனால், அன்றும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவில்லை.