AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: குவாலிஃபையர் 1ல் வெற்றி பெற்ற அணியே அதிக முறை சாம்பியன்.. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பதிவான விவரம்!

IPL Playoffs Records: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை, 18 சீசன்களில் 8 வெவ்வேறு அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதனை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

IPL 2026: குவாலிஃபையர் 1ல் வெற்றி பெற்ற அணியே அதிக முறை சாம்பியன்.. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பதிவான விவரம்!
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 May 2026 16:17 PM IST

ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தகுதிச்சுற்று 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ஆர்சிபி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். அதே சமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. தற்போது, ​​ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தகுதிச்சுற்று 2-வது சுற்றில் இன்று அதாவது 2026 மே 29ம் தேதி மோதவுள்ளன. இதற்கிடையில், ஐபிஎல் வரலாற்றில் தகுதிச்சுற்று 1, தகுதிச்சுற்று 2 மற்றும் எலிமினேட்டர் சுற்றுகளில் எத்தனை அணிகள் கோப்பையை வென்றுள்ளன என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ALSO READ: தகுதிச்சுற்று 2 போட்டியில் மழைக்கு வாய்ப்பு! போட்டி ரத்தா? பைனலுக்கு செல்வது யார்?

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை, 18 சீசன்களில் 8 வெவ்வேறு அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதனை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதே சமயம், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன. தகுதிச்சுற்று 1, தகுதிச்சுற்று 2 மற்றும் எலிமினேட்டர் சுற்றுகளில் வென்ற கோப்பைகளின் புள்ளிவிவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

குவாலிஃபையர் 1:

குவாலிஃபையர் 1-ல் வெற்றி பெற்ற அணி இதுவரை 12 முறை பட்டத்தை வென்றுள்ளது. 5 அணிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 2011, 2018, 2021 மற்றும் 2023-ல் பட்டத்தை வென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் 2015, 2019, 2020-ல் பட்டத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனி 2012, 2014, 2024-ல் பட்டத்தை வென்றுள்ளது. அதே சமயம், குஜராத் டைட்டன்ஸ் 2022-லும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025-லும் பட்டத்தை வென்றுள்ளன. 2008, 2009 மற்றும் 2019-ல் அரையிறுதிப் போட்டி முறை இருந்ததால், அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 2010ம் ஆண்டு முதலே ஐபிஎல்லில் பிளே ஆஃப் போட்டிகள் முறை தொடங்கியது.

குவாலிஃபையர் 2:

குவாலிஃபையர் 1-ல் தோற்று, குவாலிஃபையர் 2-ல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டுமே. கடந்த, 2013 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. குவாலிஃபையர் 1-ல் தோற்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் மீண்டு வந்து பட்டத்தை வென்றது. 2013-ல், குவாலிஃபையர் 1-ல் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது. பின்னர், குவாலிஃபையர் 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், பைனலில் மும்பை அணி சென்னையை வீழ்த்தி பட்டத்தை வென்றனர். அதே சமயம் 2017-ல், அவர்கள் குவாலிஃபையர் 1-ல் புனே ரைசிங் சூப்பர்ஜெயண்ட்ஸிடம் தோற்று, குவாலிஃபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இறுதிப் போட்டியில் புனேவை வீழ்த்தி மும்பை பட்டத்தை வென்றது.

ALSO READ: மும்பை அணியை விட்டு வெளியேறும் ஹர்திக் பாண்டியா? அடுத்த கேப்டன் யாராக இருக்கும்?

எலிமினேட்டர்:

எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்று பட்டத்தை வென்ற சாதனை, ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2016-ல் ஹைதராபாத் அணி எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். குவாலிஃபையர் 2-ல், ஹைதராபாத் அணி குஜராத் லயன்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் அடிப்படையில், நாக் அவுட் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பட்டத்தை வென்ற ஒரே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான்.

Follow Us