AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs ZIM W: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் அணி..!

India Women vs Zimbabwe Women 2nd ODI: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்தது. இந்த பெரிய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

IND W vs ZIM W: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் அணி..!
இந்திய மகளிர் அணிImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 25 Oct 2026 22:22 PM IST

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்தது. இந்த பெரிய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், இந்தியா 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 121 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) ஆட்ட நாயகி விருதை வென்றார்.

ALSO READ: சதம் அடித்து கலக்கிய ஹர்மன் – தீப்தி.. இந்திய அணி 328 ரன்கள் குவிப்பு!

ஹர்மன்பிரீத்தின் அபாரமான சதம்..

இந்திய இன்னிங்ஸில் ஹர்மன்பிரீத் கவுர் முக்கியப் பங்காற்றினார். அவர் 121 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்தார். ஒரு முக்கியமான நேரத்தில் இன்னிங்ஸை முன்னோக்கி எடுத்துச் சென்ற ஹர்மன்பிரீத்தின் சதமே, இந்தியா இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலும் பொறுப்புடன் பேட் செய்து, 67 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்தார். அதேநேரத்தில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது. ஷஃபாலி வர்மா 8 ரன்களும், தேஜல் ஹசப்னிஸ் 3 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தீப்தி ஷர்மாவும் சதம் அடித்து அசத்தல்:

ஹர்மன்பிரீத்துடன் சேர்ந்து, தீப்தி ஷர்மாவும் பேட்டிங்கில் ஜொலித்து, 15 பவுண்டரிகளின் உதவியுடன் வெறும் 86 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன், சாயலி சத்கரா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிச்சா கோஷ் 7 ரன்கள் எடுத்தார்.

மிகப்பெரிய இலக்கு:

328 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை. மோடெஸ்டர் முச்சிபாகிவா 49 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். சிபோ முகேரி-ட்ரிபானோ 46 ரன்களும், பெலவ்ட் பிஜா 34 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைக்கத் தவறியதால், ஜிம்பாப்வே அணி 207 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.

ALSO READ: ஹர்மன்பிரீத் கவுருக்கு எழுந்து நின்று கைதட்டிய ஸ்மிருதி மந்தனா! மைதானத்தில் நெகிழ்ச்சியான தருணம்!

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தனது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

Follow Us