AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs ZIM W: கலக்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தல்!

Harmanpreet Kaur Century: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 101 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் அவரது 8 சதமாகும். மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

IND W vs ZIM W: கலக்கிய ஹர்மன்ப்ரீத் கவுர்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தல்!
ஹர்மன்ப்ரீத் கவுர்Image Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 25 Oct 2026 17:31 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 101 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் அவரது 8 சதமாகும். மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். முன்னதாக, ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் 91 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடியதைத் தொடர்ந்து, ஹர்மன்பிரீத் கவுர் ஒருநாள் தொடரில் மிதாலி ராஜை முந்தி ஒரு அற்புதமான சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுரின் அற்புதமான ஆட்டம்:

முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி, 19 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஹர்மன்பிரீத், தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து,  தீப்தி ஷர்மாவுடன் நான்காவது விக்கெட்டுக்கு மற்றொரு சதம் பார்ட்னர்ஷிப் கூட்டணியை அமைத்தார்.

ஹர்மன்பிரீத்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டி வாழ்க்கை எப்படி இருந்துள்ளது?

ஹர்மன்பிரீத் தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி வாழ்க்கையை 2009ம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராகத் தொடங்கினார் .இதுவரை 166 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்மன்ப்ரீத் கவ்ய்ர், 144 இன்னிங்ஸ்களில் சுமார் 38 சராசரி மற்றும் 77 ஸ்டிரைக் ரேட்டுடன் 4,641 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் 24 அரை சதங்கள் அடங்கும், அவரது சிறந்த ஸ்கோர் 171 ஆகும். ஜிம்பாப்வேக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவிர் ஆடிய இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

Follow Us