IND vs NZ: 2 நாள் ஓய்வு! இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி எப்போது?
India vs New Zealand 3rd T20: இந்தியா vs நியூசிலாந்து 3வது T20 போட்டி வெலிங்டனில் அக்டோபர் 27, 2026 அன்று நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்தியா, இந்த போட்டியில் வென்றால் தொடரை வெல்லும். இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு போட்டி தொடங்கும். சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி லிவ்-வில் நேரலை காணலாம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது போட்டி, வருகின்ற 2026 அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி (Indian Cricket Team) வெற்றி பெற்றது. அந்த இரண்டு போட்டிகளிலும், நியூசிலாந்தின் கைகளிலிருந்து இந்திய அணி வெற்றியைத் தட்டிப் பறித்தது. தற்போது, 3வது டி20 போட்டி நியூசிலாந்தின் தலைநகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரைக் கைப்பற்றும்.
ALSO READ: ஃபீல்டிங் சொதப்பல்.. – தோல்விக்கு காரணங்களை அடுக்கிய நியூசிலாந்து கேப்டன்!
இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி எப்போது..?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி, வருகின்ற 2026 அக்டோபர் 27ம் தேதி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நடைபெறும். போட்டியின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. போட்டியும் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குத் தொடங்கும். டாஸ் இந்திய நேரப்படி மதியம் 12:00 மணிக்கு நடைபெறும்.




முதல் இரண்டு டி20 போட்டிகளில் நடந்தது என்ன..?
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக இருந்தன. இரண்டு போட்டிகளுமே கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றன. முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து 226 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. அதனை இந்திய அணி 2 பந்துகள் மீதமிருக்க எட்டியது. இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இம்முறை, இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்க வெற்றி பெற்றது.
வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்திற்கான பிட்ச் ரிப்போர்ட்:
இது ஒரு பெரிய மைதானம் அல்ல. ஆடுகளம் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருந்து, நல்ல பவுன்ஸைத் தரும். மேலும் புதிய பந்தும் நன்றாக ஸ்விங் ஆகிறது. இருப்பினும், பழைய பந்தைக் கொண்டு ரன்கள் எடுப்பது எளிது. இதன் விளைவாக, 3வது டி20 போட்டி அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக அமையக்கூடும். டாஸ் வெல்லும் அணிகள், ஆரம்ப ஓவர்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் காற்றின் சாதகத்தைப் பயன்படுத்திக்கொள்ள, பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகின்றன. இந்த மைதானத்தில் இலக்குகளைத் துரத்துவது எளிதானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: திலக் – நிதிஷின் தரமான கூட்டணி.. பயம் காட்டி இந்திய அணி வெற்றி!
தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் நேரலை விவரங்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் தொலைக்காட்சியில் நேரடியாகக் காணலாம். இந்தப் போட்டி சோனி லிவ் ஆப் வழியாக மொபைல் சாதனங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.