AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: நியூசிலாந்து ODI தொடருக்காக ஸ்பெஷல் பயிற்சி.. களம் கண்ட விராட் கோலி!

Virat Kohli Training Video: இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. 2027 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்தொடருக்காக விராட் கோலி மும்பையில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடது கை சுழல், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் பயிற்சி செய்துள்ளார். சச்சினின் 100 சத சாதனையை முறியடிக்கும் இலக்குடனும் கோலி களமிறங்குகிறார்.

IND vs NZ: நியூசிலாந்து ODI தொடருக்காக ஸ்பெஷல் பயிற்சி.. களம் கண்ட விராட் கோலி!
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Oct 2026 17:32 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 226 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி (Indian Cricket Team), முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 24ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. டி20 போட்டிகளைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக விராட் கோலி தீவிர பயிற்சியைத் தொடங்கியுள்ளார். மும்பையில் விராட் கோலி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ALSO READ: 300வது டி20யில் களமிறங்கிய இந்தியா.. 200வது வெற்றியை பதிவு செய்யுமா?

டி20 தொடர் முடிந்தவுடன், இந்தியா தனது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வருகின்ற 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இந்த தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இதுவே அவர்களுக்கான கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுவரை, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நல்ல பார்முடன் இருந்து உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது முக்கியம்.

கடும் பயிற்சியில் விராட் கோலி:


நியூசிலாந்து ஒருநாள் தொடரை கருத்தில் கொண்டு விராட் கோலி சில நாட்களுக்கு முன்பு மும்பை வந்தடைந்தார். நேற்று அதாவது 2026 அக்டோபர் 23ம் தேதி கோலி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது. அப்போது, கோலி இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகப் பயிற்சி செய்ததுடன், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சில சிறப்பான ஷாட்களையும் ஆடினார். அந்தப் பயிற்சியின் போது, ​ கோலி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.

100 சத சாதனையை முறியடிப்பாரா கோலி..?

37 வயதான விராட் கோலிக்கு பல சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. அவற்றில் மிகப்பெரியது 100 சர்வதேச சதங்கள் அடித்த சாதனையாகும். விராட் ஏற்கனவே 86 சதங்களை (30 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 1 டி20) அடித்துள்ளார். சச்சினின் சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் 14 சதங்கள் தேவை. இந்த மைல்கல்லை எட்டுவது கடினம் என்றாலும், கோலியின் தற்போதைய ஆட்டத்திறனைக் கருத்தில் கொண்டால், அது சாத்தியமற்றதாகத் தெரியவில்லை.

ALSO READ: காயத்தால் வெளியேறிய இஷான் கிஷன்.. மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ!

இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் அட்டவணை:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் வருகின்ற 2026 நவம்பர் 1ம் தேதி நிறைவடைகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 4ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறும். இரண்டாவது ஒருநாள் போட்டி 2026 நவம்பர் 7ம் தேதி வெலிங்டனிலும், மூன்றாவது போட்டி 2026 நவம்பர் 10ம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறும். நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் முறையே 2026 நவம்பர் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறும்.

Follow Us