AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: பொல்லார்ட்க்கு பெருமை சேர்த்த தருணம்.. பயிற்சியாளராக நியமித்த மும்பை இந்தியன்ஸ்!

Mumbai Indians Head Coach: ஐபிஎல் 2027 சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அணியுடனான பொல்லார்ட்டின் 16 ஆண்டுகாலத் தொடர்பு நீள்கிறது. நீதா அம்பானி அவரது நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அணிக்கு வெற்றி தேடித் தருவார் என நம்பிக்கை தெரிவித்தார். பொல்லார்ட் தனது புதிய பொறுப்பு குறித்து பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.

IPL 2027: பொல்லார்ட்க்கு பெருமை சேர்த்த தருணம்.. பயிற்சியாளராக நியமித்த மும்பை இந்தியன்ஸ்!
கீரன் பொல்லார்ட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Oct 2026 14:43 PM IST

ஐபிஎல் 2027 சீசனுக்கு (IPL 2027) முன்பாக மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, கீரன் பொல்லார்ட்டை தனது புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. மும்பை அணியுடனான பொல்லார்ட்டின் 16 ஆண்டுகால உறவு தொடர்ந்து நீள்கிறது. எம்ஐ-யின் மிக வெற்றிகரமான பயணத்தில் பொல்லார்ட் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார். மேலும் பல ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை உரிமையாளர் நீதா எம். அம்பானி, பொல்லார்ட்டின் நியமனம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ALSO READ: பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ஜெயவர்தனே.. மாற்றத்தை எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸ்!

பொல்லார்ட் பயிற்சியாளராக நியமனம் செய்தது குறித்து பதிவிட்ட நீதா அம்பானி, “பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸில் சேர்ந்தபோது அவருக்கு வயது வெறும் 22 தான். கடந்த 16 ஆண்டுகளில், அவர் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகிவிட்டார். ஒரு வீரராக, பொல்லார்ட் எங்களுக்கு மறக்க முடியாத பல தருணங்களை வழங்கியுள்ளார். ஒரு பயிற்சியாளராக, பொல்லார்ட் தனது அனுபவம், ஆர்வம் மற்றும் ஆட்டம் குறித்த ஆழ்ந்த அறிவை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார். அவர் இப்போது தலைமைப் பயிற்சியாளர் என்ற புதிய பொறுப்பை ஏற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மும்பை இந்தியன்ஸ் சீருடையை அணிவதன் அர்த்தம் என்னவென்றும், ஓர் அணிக்காக விளையாட என்ன தேவை என்றும் பாலிக்குத் தெரியும். இந்தப் பொறுப்பிலும் அவர் அதே அர்ப்பணிப்பையும், நம்பிக்கையையும், உறுதியையும் தொடர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அணியை அதன் அடுத்த பயணத்தில் அவர் வழிநடத்தும் வேளையில், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது எனக்குப் பெருமை – பொல்லார்ட்


தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் பொறுப்பை ஏற்பது தனக்குக் கிடைத்த கௌரவம் என்று பொல்லார்ட் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், ”மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது எனக்குக் கிடைத்த கௌரவம். மும்பை இந்தியன்ஸ் என் வாழ்விலும் தொழில் வாழ்க்கையிலும் ஒரு பெரிய அங்கமாக இருந்து வருகிறது. இந்த அணியுடனும், வீரர்களுடனும், அணியுடனும் எனக்குள்ள உறவு எனக்கு மிகவும் சிறப்பானது. ஒரு வீரராகவும், பின்னர் ஒரு பயிற்சியாளராகவும் இந்தப் பயணத்தில் ஒரு அங்கமாக இருந்ததால், மும்பை இந்தியன்ஸ் எதைக் குறிக்கிறது என்பதையும், இந்த நீலம் மற்றும் தங்க நிற ஜெர்சியை அணிவதால் வரும் மகத்தான பொறுப்பையும் நான் புரிந்துகொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

ALSO READ: டெல்லிக்கு படையெடுக்கும் பயிற்சியாளர்கள்.. ஸ்பின் கோச்சாக அமித் மிஸ்ரா நியமனம்!

வீரர்கள் மற்றும் துணைப் பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றி, அணியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும், திறமைகளை வளர்க்கவும், அணிக்குக் கொண்டாடுவதற்கான பல வாய்ப்புகளை வழங்கவும் நான் ஆவலுடன் உள்ளேன்.” என்று தெரிவித்தார்.

Follow Us