IPL 2027: டெல்லி அணியில் பண்ட் இதற்கு சரியாக இருப்பார்.. ட்விஸ்டை உடைத்த கங்குலி!
Rishabh Pant IPL 2027 Comeback: ஐபிஎல் 2027 சீசனுக்காக ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தடுமாறி வந்த பண்ட், டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் கச்சிதமாகப் பொருந்துவார் எனப் புதிய தலைமைப் பயிற்சியாளர் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் தடுமாற்றமான காலகட்டத்தை கடந்துவரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் கச்சிதமாகப் பொருந்துவார் என்றும், வருகின்ற ஐபிஎல் 2027 சீசனில் (IPL 2027) தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் சௌரவ் கங்குலி (Sourav Ganguly) நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக இதுவரை 111 போட்டிகளில் விளையாடி, 3,284 ரன்கள் எடுத்ததுடன், கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். பின்னர், கடந்த ஐபிஎல் 2025 சீசன் முதல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்து, அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான அவரது பயணம் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையாததால், குல்தீப் யாதவுடனான ஒரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார்.
ALSO READ: சூடுபிடிக்கும் ஐபிஎல் 2027! டெல்லி அணியின் பயிற்சியாளராக கங்குலி..!
ரிஷப் பண்ட் மீது சௌரவ் கங்குலிக்கு நம்பிக்கை:
டெல்லி அணியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ரிஷப் பண்ட் குறித்து பேசிய கங்குலி, “எங்களுக்கு ஒரு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்பட்டது. அந்தத் தேவைக்கு பண்ட் கச்சிதமாக இருப்பார். பண்ட் எங்களுடன் இருந்து சிறப்பாகச் செயல்பட்டார். வருகின்ற ஐபிஎல் 2027 சீசனில் ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்குத் திரும்பும்போது, கிடைக்கும் நேரம், வாய்ப்பு மற்றும் போட்டிகளைப் பயன்படுத்தி தன்னை ஒரு சிறந்த வீரராக மாற்றிக்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.




டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் பேட்டிங் செய்வதை பண்ட் விரும்புகிறார் என்பது எங்களுக்கு தெரியும். வரும் ஆண்டுகளில் டெல்லி ஜெர்சியில் பந்தின் சிறந்த ஆட்டத்தை நாம் காண்போம் என்று நம்புகிறோம்.” என்றார்.
டெல்லி கேப்பிட்டல்ஸின் தென்னாப்பிரிக்க அணியான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸில் தனது பயிற்சியாளர் வாழ்க்கையைத் தொடங்கிய கங்குலி, இந்த அதிக அழுத்தமுள்ள பொறுப்பு குறித்த தனது அணுகுமுறையையும் விளக்கினார். அவர் கூறியதாவது, “இது ஒரு வீரராக விளையாடுவதைப் போன்றது அல்ல. இது சற்று வித்தியாசமானது. நீங்கள் விஷயங்களைப் புரிந்துகொண்டு அமைதியாக இருக்க வேண்டும். வீரர்களிடமிருந்து சிறந்ததை வெளிக்கொணர்ந்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு வழியைக் கண்டறிய வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர்.” என்று தெரிவித்தார்.
ALSO READ: கேப்டன்ஷி கிடைக்காத அதிருப்தி.. ஹைதராபாத் அணியில் இருந்து விலகும் அபிஷேக்?
கங்குலியும் டெல்லி அணியும்..
2019-ல் சௌரவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆலோசகராகச் சேர்ந்தபோது, அதனுடனான அவரது தொடர்பு தொடங்கியது. பல ஆண்டுகளாக கங்குலி, கேப்பிட்டல்ஸ் அணியின் கட்டமைப்பிற்குள் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டிற்கும் கிரிக்கெட் இயக்குநராகப் பணியாற்றியது உட்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.