AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே எனது பயணம்.. சூர்யகுமார் யாதவ் உறுதி!

Suryakumar Yadav: சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 127 டி20 போட்டிகளில் விளையாடி, 36.54 சராசரி மற்றும் 151.24 ஸ்டிரைக் ரேட்டுடன் 4,020 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் ஆடிய காலத்தில், 2 சதங்கள், 30 அரை சதங்கள், 433 பவுண்டரிகள் மற்றும் 158 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

IPL 2027: மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே எனது பயணம்.. சூர்யகுமார் யாதவ் உறுதி!
சூர்யகுமார் யாதவ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Sep 2026 18:29 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியில் (Mumbai Indians) தனது எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் 2027 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது 10வது சீசனை விளையாடுவேன் என்று வெளிப்படுத்தியுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, வருகின்ற ஐபிஎல் 2027 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் வெளியேறி, வேறு அணிக்கு செல்லலாம் என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்தநிலையில், இது தொடர்பான விளக்கத்தை சூர்யகுமார் யாதவ் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ALSO READ: மகளிர் ப்ரீமியம் லீக் போட்டிகள் எப்போது தொடங்கும்? வெளியான அறிவிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது 10வது ஐபிஎல்:

ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பேக்கு அளித்த பேட்டியில், சூர்யகுமார் அடுத்த ஐபிஎல் சீசனை எதிர்நோக்கியிருந்த அதே வேளையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது தொடர்பு குறித்தும் பேசினார். அதில், “நான் மீண்டும் வான்கடே ஸ்டேடியத்தில் காலடி எடுத்து வைக்கும்போது, ​​அது மும்பை இந்தியன்ஸ் அணியில் எனது 10வது ஆண்டாக இருக்கும். இது ஒரு அழகான பயணம். நான் எப்போதும் உற்சாகமாக இருப்பேன். இது ஒரு திருவிழா போன்றது. இந்த மும்பை இந்தியன்ஸ் ஃபிரான்சைஸுக்காக விளையாடுவதில் நான் இரட்டிப்பு உற்சாகம் அடைகிறேன். என் ரத்தத்தைப் பரிசோதித்தால், அது நீல நிறமாக இருக்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் ஒரு நிறுவனம் போன்றது. உங்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கப்படும். மும்பை அணி ஆண்டு முழுவதும் உங்கள் வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள். மும்பையில் கிரிக்கெட் வீரர்களுக்காக ஆண்டு முழுவதும் ஒரு நல்ல வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.” என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சூர்யகுமாரின் புள்ளிவிவரங்கள்

சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 127 டி20 போட்டிகளில் விளையாடி, 36.54 சராசரி மற்றும் 151.24 ஸ்டிரைக் ரேட்டுடன் 4,020 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் ஆடிய காலத்தில், 2 சதங்கள், 30 அரை சதங்கள், 433 பவுண்டரிகள் மற்றும் 158 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

ALSO READ: 25 சதவீத பங்குகளை கேட்டாரா தோனி..? அதிரடி விளக்கத்தை கொடுத்த சிஎஸ்கே!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,432 ரன்கள் குவித்துள்ள முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தப்படியாக தற்போது அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்தில் உள்ளார். அந்தப் பட்டியலில் கீரோன் பொல்லார்ட் 3,915 ரன்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Follow Us