AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: ராகுல் டிராவிட்டை நாடும் சிஎஸ்கே.. அடுத்த பயிற்சியாளர் யார்?

CSK New Head Coach: கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு ஏமாற்றமளித்து வருகிறது. இதற்கிடையில், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அணியை விட்டு விலகியுள்ளார். அவர் இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். ஸ்டீபன் ஃபிளெமிங் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் வழிகாட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

IPL 2027: ராகுல் டிராவிட்டை நாடும் சிஎஸ்கே.. அடுத்த பயிற்சியாளர் யார்?
ராகுல் டிராவிட் - தினேஷ் கார்த்திக்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Sep 2026 08:00 AM IST

ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்காக அணிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்தத் தொடருக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும், பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் தலைமைப் பயிற்சியாளர் யார்? என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உண்மையிலேயே ராகுல் டிராவிட்டைத் தொடர்பு கொண்டதா? டிராவிட் ஒப்பு கொண்டாரா உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக எம்.எஸ்.தோனி.. பயிற்சியாளராக இவரா?

சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?


கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு ஏமாற்றமளித்து வருகிறது. இதற்கிடையில், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அணியை விட்டு விலகியுள்ளார். அவர் இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். ஸ்டீபன் ஃபிளெமிங் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் வழிகாட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிடைத்த தகவல்களின்படி, காலியாக உள்ள இடத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு முன்னாள் வீரர்களை அணுகியுள்ளது. தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரும் அவர்களில் அடங்குவர். இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து மேத்யூ ஹேடனும் வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த அணியில் மேத்யூ ஹேடனும் ஒரு அங்கமாக இருந்தார். எனவே, அவர் சொன்னதில் நிச்சயம் உண்மை இருக்க வேண்டும். ஹேடனின் கூற்றுப்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராகப் பரிந்துரைத்துள்ளது. தினேஷ் கார்த்திக்கின் பெயரும் இதில் உள்ளது.

ராகுல் டிராவிட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஐபிஎல் அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணியின் வழிகாட்டியாகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் உள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ், ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்றுள்ளது.

ALSO READ: வீரராக தொடரும் ஹர்திக்.. கேப்டன் பதவிக்கு 2 பெயர்.. மும்பை அணியில் பெரும் மாற்றமா?

ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடன் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தலைமையின் கீழ், இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.

Follow Us