AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Pakistan Cricket Team: பீல்டிங் பயிற்சியாளர் தேவை.. லிங்க்ட்இனில் போஸ்ட் போட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Pakistan Cricket Board LinkedIn Post: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதிகளை வகுத்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவமும், ஒரு தேசிய அணி, கிளை அணி அல்லது சர்வதேச வீரர்களுடன் பணியாற்றிய முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

Pakistan Cricket Team: பீல்டிங் பயிற்சியாளர் தேவை.. லிங்க்ட்இனில் போஸ்ட் போட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Sep 2026 22:57 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு (Pakistan Cricket Team) புதிய ஃபீல்டிங் பயிற்சியாளரைத் தேடுவதற்காக பிசிபி (PCB) லிங்க்ட்இன் தளத்தை நாடியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் மெக்டெர்மாட் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அப்போதிருந்து அந்தப் பதவி காலியாக உள்ளது. ஒரு கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை லிங்க்ட்இன் தளத்தில் வெளியிடுவது அரிதானது என்றாலும், இந்த அறிவிப்பு மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், அந்தப் பதவிக்கான சில தகுதிகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ளனர். அவையும் அந்த அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026.. இந்தியா – பாகிஸ்தான் நேரடி மோதல்.. தேதி வாரியாக முழு விவரம்!

பாகிஸ்தான் வீரர்களின் மோசமான பீல்டிங்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் மோசமான பீல்டிங் காரணமாக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. இதனால், பாகிஸ்தான் அணி பல தொடர்களில் தோல்வியடைந்துள்ளது. உதாரணமாக, 2021 டி20 உலகக் கோப்பையில் ஹசன் அலி தவறவிட்ட கேட்ச் மறக்க முடியாதது. ஷஹீன் அஃப்ரிடியின் பந்துவீச்சில் மேத்யூ வேட் வீசிய கேட்சை ஹசன் தவறவிட்டார். பின்னர் வேட், தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

பீல்டிங் பயிற்சியாளருக்கான தகுதிகள் என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதிகளை வகுத்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவமும், ஒரு தேசிய அணி, கிளை அணி அல்லது சர்வதேச வீரர்களுடன் பணியாற்றிய முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நிலை 2 கிரிக்கெட் பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

வீரர்களை கேட்சுகளைப் பிடிக்க வைக்கும் ஒரு பயிற்சியாளரை மட்டும் தாங்கள் விரும்பவில்லை, மாறாக, ஆட்டத்தையும் வீரர்களையும் புரிந்துகொண்டு, அவர்களின் திறமைகளை வளர்க்க உதவும் ஒரு பயிற்சியாளரையே விரும்புகிறோம். மேலும், நவீன பீல்டிங் நுட்பங்களில் நல்ல புலமை இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 2026 செப்டம்பர் 9ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

ALSO READ: அடுத்தடுத்து 2 தோல்வி.. பாகிஸ்தான் அணியில் பயிற்சியாளர்களும் மாற்றம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் மெக்டெர்மாட் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் களத்தடுப்புப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார், இருப்பினும் அவர் விலகுவதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (PCB) இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Follow Us