IND vs AFG: இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 போட்டிகள் எப்போது? முழு அட்டவணை இதோ!
India vs Afghanistan T20 Series Schedule: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 செப்டம்பர் 15ம் தேதியும், இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 17ம் தேதியும் நடைபெறும்.
இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடருக்கான தனது அணியை ஆப்கானிஸ்தான் (Afganistan Cricket Team) நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 24ம் தேதி அறிவித்தது. ஆப்கானிஸ்தான் இந்த தொடரை நடத்தினாலும், இந்த போட்டிகள் அனைத்தையும் இந்திய அணி புது தில்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஜத்ரான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு நவீன்-உல்-ஹக் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடின. இருப்பினும், ஜனவரி 2024-க்குப் பிறகு இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டி20 தொடர் இதுவாகும். இந்தியாவுக்கும் (Indian Cricket Team) ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான டி20 போட்டிகள் எப்போது, எங்கு நடைபெறும் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 500 ரன்களை கடந்து ரன் மழை.. இலங்கைக்கு எதிராக இந்திய அணி சம்பவம்!
இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடர் அட்டவணை
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 செப்டம்பர் 15ம் தேதியும், இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 17ம் தேதியும் நடைபெறும். இந்த 3 போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும்.




- 2026 செப்டம்பர் 13 – முதல் டி20 போட்டி – அருண் ஜேட்லி மைதானம்
- 2026 செப்டம்பர் 15 – 2வது டி20 – அருண் ஜேட்லி மைதானம்
- 2026 செப்டம்பர் 17 – 3வது டி20 – அருண் ஜேட்லி மைதானம்
ஆப்கானிஸ்தான் அணி:
இப்ராஹிம் ஜத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நூர் ரஹ்மான் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷித் கான், ரஷீப் கான், நங்யூர், நங்யீப் ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்சாய் மற்றும் நவீன்-உல்-ஹக்
இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இருதரப்பு டி20 தொடரில் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளன. இது அவர்களுக்கு இரண்டாவது தொடராகும். 2017 ஜனவரியில் நடைபெற்ற இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடரின் இறுதிப் போட்டி இரண்டாவது சூப்பர் ஓவர் வரை சென்றது. அதில், இந்தியா ஒரு பரபரப்பான வெற்றியைப் பெற்றது.
ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. பலமிக்க ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் அணி தங்களது அணியை அறிவித்தாலும், இந்திய அணி குறித்து இன்னும் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. ஏனெனில், புதிய வீரர்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுவதோடு, ஏறக்குறைய ஒவ்வொரு தொடரிலும் அணியில் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்தியாவின் டி20 அணியில் ஒரு நிரந்தர அங்கமாகி வரும் வைபவ் சூர்யவன்ஷி மீதும் அனைவரின் பார்வையும் இருக்கும்.