IND vs BAN: வங்கதேசம் சுற்றுப்பயணத்தில் மீண்டும் சிக்கல்.. இந்திய அணி போட்டி அட்டவணை மாற்றமா?
IND vs BAN Series: இந்தியா - வங்கதேசம் இடையிலான சுற்றுப்பயணம் முதலில் ஆகஸ்ட் 2025-ல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் செப்டம்பர் 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த 2026ம் ஆண்டு ஜனவரியில், டாக்கா மற்றும் சிட்டகாங்கில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்தது.
இந்திய அணியின் (Indian Cricket Team) வங்கதேச சுற்றுப்பயணம் மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) வங்கதேச கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) முன்மொழியப்பட்ட அட்டவணையை மறுபரிசீலனை செய்து, தொடருக்கான புதிய கால அட்டவணையை உருவாக்க முயற்சித்து வருகின்றன. டாக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிசிபி தலைவர் தமிம் இக்பால் இதை உறுதிப்படுத்தினார். அட்டவணையின்படி, இந்திய அணி வங்கதேசத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. அதன் முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 3ம் தேதி தொடங்கவிருந்தது. இருப்பினும், இந்த சுற்றுப்பயணம் தொடங்க இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வ அட்டவணையை அறிவிக்கவில்லை.
ALSO READ: இந்தியா – ஆப்கானிஸ்தான் தொடரில் சூப்பர் கேமரா… வருகிறது FIFA டெக்னாலஜி
தற்போது மீண்டும் தேதிகளில் மாற்றமா?
இந்தியா – வங்கதேசம் இடையிலான சுற்றுப்பயணம் முதலில் ஆகஸ்ட் 2025-ல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் செப்டம்பர் 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த 2026ம் ஆண்டு ஜனவரியில், டாக்கா மற்றும் சிட்டகாங்கில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்தது. இருப்பினும், தமிம் இக்பால் செய்தியாளர்களிடம், “இந்தியா-வங்கதேசம் தொடர் குறித்து இரு வாரியங்களும் தொடர்ந்து விவாதித்து வருகின்றன. தேதிகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்,” என்று கூறினார்.




கேம் டெவலப்மென்ட் டிராபி:
பிசிபி தனது புதிய தொடரான கேம் டெவலப்மென்ட் டிராபிக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. இத்தொடர், இந்தியாவின் சுற்றுப்பயணத் தேதிகளுடன் ஒத்துப்போகும் வகையில், வருகின்ற 2026 ஆகஸ்ட் 28 முதல் 2026 செப்டம்பர் 9 வரை மிர்ப்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பேசிய தமீம் இக்பால், “இந்தத் தொடர் மிர்ப்பூரில் நடைபெறவிருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான அட்டவணை முடிவு செய்யப்பட்டவுடன், இரண்டு நிமிடங்களுக்குள் இதை பஷுந்தரா மைதானத்திற்கு மாற்ற முடியும். அதற்கேற்ப நாங்கள் ஏற்பாடுகளை இறுதி செய்வோம்,” என்றார்.
ALSO READ: ரூ. 70 கோடி நஷ்டம் டூ 500 கோடி லாபம்.. நியூசிலாந்துக்கு உதவும் இந்திய கிரிக்கெட்!
இரு வாரியத்திற்கும் இடையிலான பிரச்சனை என்ன..?
சமீபத்திய மாதங்களில் இரு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான உறவுகள் ஓரளவு மோசமடைந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் போது, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி விடுவித்த பிறகு, இரு அணிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது, குறுகிய காலத்தில் ஒரு புதிய சுற்றுப்பயண அட்டவணையை இறுதி செய்வது இரு வாரியங்களுக்கும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.